• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

குடும்பத்தையே அருவருப்பாக பேசிய ரசிகர்கள்.. உடைந்துபோன மூத்த வீரர்.. தேற்றிய ஆர்.சி.பி நிர்வாகம்!

Google Oneindia Tamil News

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். தங்களுக்கு பிடித்தமான அணி அல்லது பிடித்தமான வீரர் வெற்றி பெற்று விட்டால் வானுயர அளவுக்கு தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

அதே வேளையில் பிடித்தமான அணி தோல்வியை தழுவி விட்டாலோ, பிடித்தமான வீரர் சொதப்பிவிட்டாலோ அவ்வளவுதான். சகட்டுமேனிக்கு திட்டி தீர்க்கவும் தயங்க மாட்டார்கள். இப்படி ஒரு நிலைதான் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் டேனியல் கிறிஸ்டியனுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு ஓட்டில் வெற்றி.. ஊராட்சி மன்ற தலைவரான 21 வயது இளம்பெண் சாருலதா ஒரு ஓட்டில் வெற்றி.. ஊராட்சி மன்ற தலைவரான 21 வயது இளம்பெண் சாருலதா

 ஏமாற்றமே பரிசு

ஏமாற்றமே பரிசு

கேப்டனாக தனது கடைசி தொடரில் இந்த முறையாவது கோலி கோப்பையை வாங்கி கொடுப்பார் என எதிர்பார்த்து இருந்த பெங்களூரு ரசிகர்களுக்கு வழக்கம்போல் ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. கொல்கத்தாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் தோற்று வெளியேறியது பெங்களூரு.
ஒட்டுமொத்த பேட்மேன்ஸ்களும் சொதப்ப 20 ஓவர்களில் 138 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களுரு. இதை விரட்டிய கொல்கத்தாவும் போராடிதான் வெற்றி பெற்றது.

டேனியல் கிறிஸ்டியன் பாவம்

டேனியல் கிறிஸ்டியன் பாவம்

பெங்களூரு வெளியேறியதால் அந்த அணியின் ரசிகர்கள் ஏகத்துக்கும் உணர்ச்சி வசப்பட்டனர். தோல்விக்கு காரணமானவர்களை வசைபாடினார்கள். அதுவும் பெங்களூரு வீரர் டேனியல் கிறிஸ்டியனை தரக்குறைவாக திட்டினார்கள். ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா தடுமாறியபோது, ஒரே ஓவரில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்தார் டேனியல் கிறிஸ்டியன். இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக கொல்கத்தா வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால்தான் டேனியல் கிறிஸ்டியன் மீது ரசிகர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர்.

  Virat Kohlis Emotional Speech After Royal Challengers Bangalores IPL 2021 Exit |Oneindia Tamil
  அருவருப்பாக நடந்தனர்

  அருவருப்பாக நடந்தனர்

  ஆத்திரம் அடங்காத ரசிகர்கள் டேனியல் கிறிஸ்டியனை திட்டி இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அவரது மனைவியையும் சேர்த்து திட்டினார்கள். கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை சிலர் அருவருப்பாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. ரசிகர்களின் இந்த செயலுக்கு முதல் ஆளாக கண்டனம் தெரிவித்தார் பெங்களூரு அணி வீரர் கிளைன் மேக்ஸ்வெல். ''இந்த சீசனில் நாங்கள் ஓரளவு நன்றாகத்தான் விளையாடினோம். ரொம்ப மோசமாக விளையாடவில்லை. ஆனால் சமூக ஊடகங்களில் சிலர் மோசமாக நடந்து கொள்கின்றனர்.

   ளைன் மேக்ஸ்வெல் பதிலடி

  ளைன் மேக்ஸ்வெல் பதிலடி

  நாம் அனைவரும் மனிதர்கள். ஒவ்வொரு நாளும் முடிந்த பங்களிப்பைச் செய்து வருகிறோம். கொச்சையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. கெட்ட செய்திகளை பரப்புவதற்குப் பதிலாக ஒழுக்கமான நல்ல மனிதர்களாக இருங்கள்'' என கிளைன் மேக்ஸ்வெல் பதிலடி கொடுத்தார். மேக்ஸ்வெல் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த பலரும் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள் என்று கூறினார்கள்.

  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம்

  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம்

  இந்த நிலையில் இந்த விவகாரத்தில் டேனியல் கிறிஸ்டியன் பக்கம் நிற்பதாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ' டேனியல் கிறிஸ்டியன் நாங்கள் உங்களுடன் 100% அளவுக்கு துணை நிற்போம். வீரர்கள் மற்றும் குறிப்பாக அவர்களின் குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் மீதான துஷ்பிரயோகத்தை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்'' என்று கூறியுள்ளது.

  English summary
  Bangalore Royal Challengers player Daniel Christian is 100% supported by the team management. Bangalore player Daniel Christian was scorned by the fans
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X