பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்படியும் கார்களில் தீ பிடிக்குமா? பெங்களூரில் 278 கார்கள் தீ விபத்தில் சிக்கியதன் காரணம் வெளியானது

Google Oneindia Tamil News

Recommended Video

    பெங்களூர் விமான கண்காட்சியில் பயங்கர தீ விபத்து..வீடியோ

    பெங்களூர்: பெங்களூருவில் விமான கண்காட்சி நடைபெற்ற, இடத்திற்கு அருகே 278 கார்கள் எரிந்து நாசமான சம்பவத்தின் பின்னணி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

    பெங்களூரு எலகங்கா பகுதியில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வந்தது. கண்காட்சியின் நான்காவது நாளான கடந்த சனிக்கிழமையன்று, பார்வையாளர்கள் கார்களை நிறுத்தி வைக்கும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 278 கார்கள் தீயில் கருகி முழுமையாக சேதமடைந்தன. 73 கார்களுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டது.

    விடை கிடைத்தது

    விடை கிடைத்தது

    இத்தனை கார்களுக்கு ஒரே நேரத்தில் தீ எவ்வாறு பரவியது என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. இந்த கொடுமையான விபத்து தொடர்பாக இந்திய பாதுகாப்புத் துறையும் தனது விசாரணையை தொடங்கி உள்ளது. முன்னதாக நேற்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

    சைலன்ஸர்

    சைலன்ஸர்

    இது தொடர்பாக பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தீ விபத்திற்கு காரணம் என்ன என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் சைலன்ஸரில் மிக அதிகமான அளவுக்கு சூடு இருந்ததுதும், அந்த சூடு தான் அந்த காரில் தீ பிடிக்க காரணமாக இருந்துள்ளதும், அப்போது சுமார் 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் இருந்ததால் தீ மளமளவென பிற கார்களுக்கும் பரவியுள்ளதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

    சிகரெட் என்றனர்

    சிகரெட் என்றனர்

    கார்கள் நிறுத்தப் பட்ட பகுதி கோரைப் புற்கள் அதிகமாக உள்ள பகுதியாகும். எனவே நெருப்பு, காற்றின் உதவியோடும் மிக வேகமாக பரவி உள்ளதாக கூறப்படுகிறது. யாரோ சிகரெட்டை அணையாமல் தூக்கிப்போட்டு, அதன் மூலமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதலில் சந்தேகம் எழுந்த நிலையில் சைலன்ஸர் அதிக சூடானது.

    அரிதான நிகழ்வு

    அரிதான நிகழ்வு

    சைலன்ஸர் சூடு காரணமாக காரில் தீப்பிடித்து அது பிற காார்களுக்கும் பரவியதாக தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அரிதினும் அரிதாக நிகழக்கூடியவை என்கிறார்கள் மோட்டார் துறை வல்லுனர்கள். இது உண்மையான காரணம் தானா என்று சந்தேகம் எழுப்புகின்றனர் எதிர்கட்சியினர்.

    English summary
    The probable cause stated in Bengaluru was fire starting from an overheated silencer of one of the cars parked in the parking area Accentuated by strong winds, the fire spread quickly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X