பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுற்றி போலீஸ் வாகனம்.. தலைமைச் செயலக கேட்டுகளுக்கு பூட்டு.. அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஹீரோ வெல்கம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கிட்டத்தட்ட முதல்வருக்கு இணையான பாதுகாப்புடன் தலைமைச் செயலகம் வந்துள்ளனர் கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்.

இன்று மாலை 6 மணிக்குள் சபாநாயகர் சந்தித்து தேவைப்பட்டால் உங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது தான் தாமதம்.. மும்பை ஹோட்டலில் இருந்து, வழக்கு தொடர்ந்த 10 எம்எல்ஏக்களும் சிறப்பு விமானத்தில் பெங்களூர், ஹெச்ஏஎல் விமான நிலையம் வருகை தந்து, அங்கிருந்து பஸ் மூலமாக தலைமைச் செயலகமான விதான சவுதா வருகை தந்தனர்.

Rebel MLAs in Karnataka getting Hero welcome

பஸ் மூலமாக அவர்கள் வருகை தந்தபோது, சுற்றிலும் காவல்துறை வாகனங்கள் அணிவகுத்தன. கிட்டத்தட்ட முதல்வருக்கு ஈடாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் யாராவது அவர்கள் மீது தாக்குதல் நடத்தி விடக் கூடும் என்ற அச்சமும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் ஒரே ஒரு வாசல் மட்டுமே திறக்கப்பட்டது. பிற வாசல்கள் அடைக்கப்பட்டன.

அங்கு, போலீஸ் கமிஷனர் அலோக் குமார் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். பாஜக நிர்வாகிகள் யாரையும் தலைமைச் செயலகத்தில் விடவில்லை. இதனால் அவர்கள் கோஷமிட்டதையும் பார்க்க முடிந்தது.

மேலும், தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோவாக பதிவு செய்ய சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு ஏதோ திரைப்படங்களில் கதாநாயகன் வருகைக்கு கொடுக்கப்படும் பில்டப்புகள் போல ராஜினாமா செய்த இந்த 10 எம்எல்ஏக்களுக்கும் கொடுக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம், நேற்றைய தினம் காங்கிரஸ் எம்எல்ஏ சுதாகர் ராஜினாமா கொடுக்க வந்தபோது நிர்வாகிகள் சிலர் அவரை தலைமைச் செயலகத்தில் வைத்து தாக்கினர். இதை மனதில் கொண்டுதான், சபாநாயகரை சந்திக்க செல்லும், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு, உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கர்நாடக டிஜிபிக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து தான் இத்தனை கெடுபிடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் 150 கி.மீ பாதயாத்திரை போக வேண்டும்.. பாஜக எம்பி-க்களுக்கு மோடி அதிரடி உத்தரவு அக்டோபரில் 150 கி.மீ பாதயாத்திரை போக வேண்டும்.. பாஜக எம்பி-க்களுக்கு மோடி அதிரடி உத்தரவு

ஆனால், 6 மணிக்குள் எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்திக்கவில்லை. சில நிமிடங்கள் தாமதமாகவே அவர்கள் தலைமைச் செயலகம் வந்து சேர்ந்தனர்.

English summary
Rebel MLAs in Karnataka getting Hero welcome and police protection as like as CM getting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X