பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உங்க காலுக்கு ஒரு கும்பிடு.. நிம்மதியாக சாக விடுங்கள்! பிரஸ் மீட்டில் உருகிய கர்நாடக சபாநாயகர்

Google Oneindia Tamil News

பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகர் ரமேஷ் குமாரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். இதன்பிறகு, ரமேஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

அதிருப்தி எம்.எல்.ஏக்கள், இன்று என்னை சந்தித்தபோது, சிலர் தங்களை மிரட்டியதாக சொன்னார்கள். எனவேதான் மும்பைக்குச் சென்று தங்கியுள்ளதாகவும், கூறினர். ஆனால் அப்படி பயம் இருந்தால், அவர்கள் என்னைத்தானே அணுகியிருக்க வேண்டும் என்று நான் அவர்களிடம் சொன்னேன். அப்படி சொல்லியிருந்தால், நானே அவர்களுக்கு பாதுகாப்பு அளித்திருப்பேன். அவர்கள் லாஜினாமா கடிதம் கொடுத்து, இதுவரை, 3 வேலை நாட்கள் மட்டுமே கடந்துள்ளன. ஆனால் ஏதோ பூகம்பம் ஏற்பட்டது போல் நடந்து கொண்டு வருகிறார்கள்.

Rebel MLAs staying in Mumbai for threaten: Karnataka Speaker

நான் வேண்டுமென்றே அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாக்களை, அங்கீகாரம் செய்வதில், தாமதம் செய்ததாக, சில செய்திகளைப் பார்த்தபோது எனக்கு வேதனை ஏற்பட்டது. நான் விசாரிக்காமல், ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டால் சட்டப்படி தவறு செய்தது போல ஆகிவிடும்.

எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்க முடியாது.. இரவெல்லாம் யோசிக்கனும்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி பேட்டி எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்க முடியாது.. இரவெல்லாம் யோசிக்கனும்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி பேட்டி

எனவே நான் திட்டமிட்டு தாமதம் செய்வதாக கூறப்படுவது தப்பு. எனக்கு 70 வயது ஆகிறது. நான் ஏதோ பலனை எதிர்பார்த்துதான், எம்எல்ஏக்கள் விவகாரத்தில் முடிவெடுக்காமல் கால தாமதம் செய்வது போல ஊடகங்களில் செய்திகள் வெளியாகிறது. இதைப் பார்த்த பொது மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். நான் உங்கள் (நிருபர்கள்) காலை நோக்கி வணங்குகிறேன். இப்படி எழுதாதீர்கள். என்னை நிம்மதியாக சாக விடுங்கள். இவ்வாறு சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.

English summary
Karnataka Speaker says They (rebel MLAs) told me that some people had threatened them & they went to Mumbai in fear. But I told them that they should've approached me & I would've given them protection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X