பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவர்களை வெளியே விட்டால் கதை முடிந்தது.. மும்பை ஹோட்டலில் குவியும் பாஜகவினர்.. ஆள் அனுப்பிய அமித் ஷா!

கர்நாடகாவில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை காங்கிரஸ் - மஜதவை சேர்ந்த அதிர்ச்சி எம்எல்ஏக்கள் யாரும் பெங்களூர் திரும்ப கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Political Crisis | பாஜகவின் திட்டங்களை தவிடு பொடியாக்கும் சபாநாயகர்-

    பெங்களூர்: கர்நாடகாவில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை காங்கிரஸ் - மஜதவை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரும் பெங்களூர் திரும்ப கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த செவ்வாய்கிழமை கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழ்ந்துள்ளது.

    குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவாகின. இதனால் பெரும்பான்மை இல்லாமல் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

    எப்படி முடிந்தது

    எப்படி முடிந்தது

    இதனால் ஒரு வழியாக 14 மாதங்களுக்கு பின் கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ளது. ஆனால் பாஜக தலைவர் எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக கர்நாடகாவில் இன்று எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைய உள்ளது. இன்று மாலை பாஜக சார்பாக எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

    யார்

    யார்

    அதேபோல் அடுத்த ஒரு வாரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு வாரத்தில் எடியூரப்பா சட்டசபையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வாஜுபாய் வாலா குறிப்பிட்டுள்ளார்.

    என்ன சந்தேகம்

    என்ன சந்தேகம்

    இதற்கு மத்தியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் இன்னும் மும்பையில் தனியார் ஹோட்டலில்தான் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் ஆட்சி கவிழ்ந்தும் கூட இன்னும் பெங்களூருக்கு திரும்பவில்லை. பெரும்பாலும் கர்நாடகாவில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை காங்கிரஸ் - மஜதவை சேர்ந்த அதிர்ச்சி எம்எல்ஏக்கள் யாரும் பெங்களூர் திரும்ப கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஏன் அப்படி

    ஏன் அப்படி

    இதற்கு காரணம் இல்லாமல் இல்லை, ஒருவேளை இப்போதே அதிர்ச்சி எம்எல்ஏக்கள் பெங்களூர் வந்தால் அவர்களிடம் காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமார் பேசுவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி டிகே சிவக்குமார் அவர்களிடம் பேசினால், எம்எல்ஏக்கள் மனசு மாறி காங்கிரஸ் பக்கம் மீண்டும் செல்ல வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடியூரப்பாவிற்கு பெரும்பான்மை கிடைக்காது.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    13 எம்எல்ஏக்கள் (3 பேர் தகுதி நீக்கப்பட்டுவிட்டார்கள்) இன்னும் ராஜினாமா செய்யவில்லை என்பதால் அவர்களை காங்கிரஸ் தரப்பு சமாதானம் செய்து கட்சிக்குள் இழுக்க பார்க்கும். இதை தடுக்கும் பொருட்டு அந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் எல்லோரையும் மும்பையில் ஹோட்டல் அறையிலேயே அடைத்து வைத்து இருக்க பாஜக தரப்பில் உத்தரவு சென்றுள்ளது. இதனால் மும்பை ஹோட்டலில் பாதுகாப்பிற்காக பாஜகவினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    English summary
    Rebel MLAs won't return to Bengaluru till Yediyurappa proves majority In Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X