பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது லிஸ்ட்லயே இல்லையே.. விவசாயிளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரிலையன்ஸ் ரீடெய்ல்

Google Oneindia Tamil News

பெங்களூரு: குறைந்தபட்ச விலைக்கு சட்டப்பூர்மான உத்தரவாதம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கர்நாடகாவில் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனம் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்திருக்கிறது.

இதை பெரிதாக கூறுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. நெல்லுக்கு அதிக விலை கொடுத்து ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் வாங்கி இருப்பதால், எல்லா விவசாயிகளும் அவர்களுக்கே விளை பொருட்களை விற்கும் வாய்ப்பு உள்ளது.

இதனால் போட்டி நிறுவனங்களும், நெல்லை கொள்முதல் செய்து ரீடைல் ஆக கடைகளுக்கு விற்கும் மொத்த வியாபாரிகளும் அதிக விலை கொடுத்து இனி நெல்லை வாங்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

அதிமுகவுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார்..? வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி..! அதிமுகவுக்கு அறிவுரை கூற ஆடிட்டர் குருமூர்த்தி யார்..? வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி..!

அதிக விலை

அதிக விலை

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் ஷிந்தனூரில் விவசாயிகளிடம் இருந்து ஒரு குவிண்டால் நெல்லை ஆயிரத்து 950 ரூபாய்க்கு ரிலையன்ஸ் ரீடெயல் நிறுவனம் இரு வாரங்களுக்கு முன் கொள்முதல் செய்திருப்பது கர்நாடகா விவசாயிகள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது,,

விலை 4.4% அதிகமாகும்

விலை 4.4% அதிகமாகும்

ஏனெனில் கர்நாடகா அரசு நிர்ணயித்து இருந்த குறைந்த பட்ச கொள்முதல் விலையை விட இந்த விலை 4.4% அதிகமாகும். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு வியாபாரிகளிடம் அதிக விலை கோர தொடங்கி உள்ளார்கள். இதனால் விளைபொருட்களை அதிக விலை தந்து வாங்க போட்டி ஏற்பட்டுள்ளது.

தந்திரம் இது

தந்திரம் இது

இதற்கு ஆதரவு இருந்தாலும் எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது. அரசும் தனியார் நிறுவனங்களும் கையாளும் தந்திரம் அங்குள்ள சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொருளுக்கு எங்கு அதிக விலை கிடைக்கிறதோ அங்கு தங்கள் பொருளை விற்பதில் எந்த தவறும் இல்லை என கர்நாடகாவின் விவசாய உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் உமாகாந்த் கூறினார்.

வருங்காலம் மாறும்

வருங்காலம் மாறும்

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கை ஓங்கிவிடும் என அச்சம் அதிகரித்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்துள்ளது போல், வருங்காலத்தில் பெரும் நிறுவனங்கள் பலவும் இதேபோல் அதிக விலை கொடுத்து விளை பொருட்களை வாங்கும் நிலை வரலாம்.

வியாபாரிகள்

வியாபாரிகள்

அப்படி வந்தால் தற்போது விவசாயிகளிடம் பொருட்களை கொள்முதல் செய்து சந்தைக்கு அனுப்பும் ஏஜெண்டுகள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பெரும் நிறுவனங்களின் முன் வியாபாரிகள் போட்டியடுவது கடினமானது என வியாபாரிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதன்விளைவாக சந்தையில் விலைபொருட்கள் விலையும் உயர வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்கள்.

English summary
About 1,100 farmers in Karnataka signed an agreement to sell their paddy directly to Reliance Retail, arm of Reliance Industries Ltd (RIL), above the minimum support price (MSP) through an agro-based company at Sindhanur in the state's northern region, an official said on lastweek.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X