பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலாவிற்கு எத்தனை நாள் சிகிச்சை... என்னென்ன மருந்துகள் தரப்படுகிறது தெரியுமா?

பத்தில் இருந்து பதினைந்து நாட்கள் மருத்துவமனையில், சசிகலா சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சசிகலாவிற்கு ரெம்டெசிவர், ஸ்டீராய்டு, இன்சுலி

Google Oneindia Tamil News

பெங்களூரு: சசிகலாவிற்கு நுரையீரல் பாதிப்பு இருப்பதால் அவர் 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று விக்டோரியா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, இம்மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆக இருந்தார்.

Recommended Video

    பெங்களூரு: முதலில் நெகட்டிவ்.. அப்புறம் ‘பாசிட்டிவ்’.. கொரோனா பிடியில் சசிகலா… ஐசியூவில் கண்காணிப்பு..!

    சசிகலாவிற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் பெங்களூரு பௌரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சசிகலாவிற்கு என்ன பாதிப்பு

    சசிகலாவிற்கு என்ன பாதிப்பு

    சசிகலாவிற்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று காலையில் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், சசிகலா அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடல் நல பாதிப்பு

    உடல் நல பாதிப்பு

    சசிகலாவிற்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற பிரச்சினைகளும் உள்ளன. சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் அளவு 95 இருப்பதாகவும்

    தொடர் கண்காணிப்பு

    தொடர் கண்காணிப்பு

    இந்த நிலையில் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா அளித்துள்ள பேட்டியில், சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக கூறினார். சசிகலாவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்.

    15 நாட்கள் சிகிச்சை

    15 நாட்கள் சிகிச்சை

    சசிகலாவிற்கு தற்போது காய்ச்சல் இல்லை. நுரையீரல் பாதிப்பால் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கு மூச்சு திணறல் இருக்கும் என்று கூறினார். சசிகலா 10ல் இருந்து 15 நாட்கள் வரையில், விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

    கொடுக்கப்படும் மருந்துகள்

    கொடுக்கப்படும் மருந்துகள்

    சசிகலாவிற்கு ரெம்டெசிவர், ஸ்டீராய்டு, இன்சுலின் மருந்துகள் தரப்படுகின்றன. சசிகலாவிற்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹைபோதைராடிசம் நோய்கள் உள்ளதாகவும் கூறினார்.

    சகல வசதிகளும் உள்ளன

    சகல வசதிகளும் உள்ளன

    சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்ட ரமேஷ் கிருஷ்ணா, அனைத்து வசதிகளும் விக்டோரியா மருத்துவமனையில் இருப்பதாகத் தெரிவித்தார். இதனிடையே சசிகலாவின் உடல்நிலை பாதிப்பு அவருடைய உறவினர்களை கவலையடையச் செய்துள்ளது.

    English summary
    Sasikala has been put on Remdesivir, Heparin, steroids, insulin and other supportive drugs. She suffers from diabetes, hypertension and hypothyroidism, the hospital statement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X