பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் வாழ்க என்ற அமுல்யா.. வீட்டின் மீது சரமாரி கல்வீச்சு.. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின

Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் வாழ்க.. ஓவைசி முன் மேடையில் கோஷம் போட்ட பெண்! மைக்கை புடுங்கி தடுக்க முயன்ற ஓவைசி! - வீடியோ

    பெங்களூர்: பெங்களூரில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான பொதுக்கூட்டத்தில் வைத்து 'பாகிஸ்தான் வாழ்க' என்று கோஷமிட்ட இடதுசாரி பெண் ஆதரவாளர் அமுல்யா வீடு மீது கல்வீச்சு நடந்துள்ளது.

    பெங்களூரில் நேற்று மாலை நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான பொதுக்கூட்ட மேடையில் வைத்து, இடதுசாரி ஆதரவாளரான அமுல்யா திடீரென பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று மேடையிலேயே மைக்கில் முழங்கினார்.

    Residence of Amulya who raised Pakistan zindabad slogan at anti-CAA rally vandalised

    அந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசியும் பங்கேற்றிருந்தார். அவர் உடனடியாக அந்தப் பெண்ணிடம் விரைந்து வந்து, நீங்கள் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்? இதை நிறுத்துங்கள் என்று கூறி மைக்கை பிடுங்க முற்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் காவல்துறையினர் அமுல்யா மீது, தேச விரோத வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக, கர்நாடக மாநிலம் சிக்மகளூர் நகரத்தில் உள்ள அமுல்யா வீட்டு மீது இன்று காலை மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி உள்ளன. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சியும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. முன்னாள் முதல்வரான சித்தராமையா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் இடுவது தவறான செயல். இது தவறு என்று அந்தப்பெண் உணரும் வகையில் காவல்துறை தண்டனை பெற்று தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Chikmagalur: Residence of Amulya (who raised 'Pakistan zindabad' slogan at anti-CAA rally in Bengaluru yesterday) was vandalised by miscreants late last night.Police have begun investigation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X