பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏசுநாதருக்கு சிலையா.. கூடாது.. 5000 வலதுசாரி அமைப்பினர் பிரமாண்ட பேரணி.. பெங்களூர் அருகே பரபரப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: 114 அடி உயர ஏசு கிறிஸ்து சிலை, நிறுவ எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர் அருகே, சுமார் 5,000 ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் பெரும் பேரணி நடத்தி அதிர வைத்துள்ளனர்.

பெங்களூர் அடுத்த ராம்நகரம் மாவட்டம், கபாலபேட்டா பகுதியில், இந்த சிலை அமையவிருந்தது. ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான டி.கே.சிவகுமார், இந்த ஏசு கிறிஸ்து சிலைக்கு, கடந்த டிசம்பர் 25ம் தேதி அடிக்கல் நாட்டினார்.

Right wing organizations wants 114 feet Jesus Christ statue should not come

இதன்பிறகு, வலதுசாரி அமைப்புகள், இந்த விவகாரத்தை கையில் எடுத்து பேச ஆரம்பித்தன. இதன் ஒரு பகுதியாக, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து ஜாக்ரன் வேதிகே ஆகிய வலதுசாரி அமைப்புகளை சேர்ந்த சுமார் 5,000 கனகபுராவில் பேரணி நடத்தனர்.

அந்த கொடுமையை இந்தியாவே கண்கொண்டு பார்த்தது.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா பாய்ச்சல்!அந்த கொடுமையை இந்தியாவே கண்கொண்டு பார்த்தது.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா பாய்ச்சல்!

இதுகுறித்து கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர்.அசோக் கூறுகையில், குறிப்பிட்ட அந்த அரசு இடத்தில், ஹரோபெல்லே கபாலபெட்டா மேம்பாட்டு அறக்கட்டளை, இந்த ஏசுநாதர் சிலையை, நிறுவதாக அறிவித்துள்ளது. அந்த நிலத்தை அரசே திரும்ப பெற்றுக்கொள்ளும்.

இது கால்நடைகள் மேய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும், கோமாளா வகை நிலம். மொத்தம் 10 ஏக்கர், நிலம், சிலை நிறுவ ஒதுக்கப்பட்டிருந்தது என்று அசோக் தெரிவித்தார்.

இதுகுறித்து, சம்மந்தப்பட்ட அறக்கட்டளைக்கு, ஏற்கனவே இரு நோட்டீஸ்களை, மாநில அரசு அனுப்பியுள்ளதாம். இதற்கு ஏற்கனவே ஒரு நோட்டீசுக்கு சம்மந்தப்பட்ட அறக்கட்டளை பதில் அளித்துவிட்டது. மற்றொரு நோட்டீசுக்கு பதில் அனுப்புவோம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
RSS and other right wing organizations wants 114 feet Jesus Christ statue should not come in Kanakapura.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X