• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்த 3 கல்லூரி மாணவர்கள் நாக்கை கொண்டு வாங்க.. ரூ.3 லட்சம் பிடிங்க.. ஸ்ரீராமசேனா பகீர் அறிவிப்பு

|

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் கல்வி பயிலும் 3 கல்லூரி மாணவர்கள் நாக்கை வெட்டுவோருக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது ஸ்ரீ ராம சேனா என்ற இந்துத்துவா அமைப்பு.

அம்மாநிலத்தின், ஹூப்ளி நகரிலுள்ளது கே.எல்.இ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி. இங்கு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த, தலிப் மஜீத், பாசித் ஆசிப் சோஃபி மற்றும் அமீர் மொஹியுதீன் வாஹி ஆகிய மாணவர்கள், சிவில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள்.

RS 3 lakh reward for chopping three Kashmiri students tongue: Sri Ram Sena

பிப்ரவரி 14ம் தேதி, இந்த 3 பேரும், புல்வாமா தாக்குதல் தினத்தை, கல்லூரி வளாகத்தில் வைத்து கொண்டாடியதாக கூறப்படுகிறது. ஆசாதி கோஷங்களையும், பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களையும் எழுப்பினர் என்று சொல்லப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மாநிலத்தில் ஆளும் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு, இம்மூவரையும், தேசத் துரோக வழக்கில் கைது செய்துள்ளது. கடந்த திங்கள்கிழமை அவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, ​​அங்கு சூழ்ந்த மக்களால் தாக்கப்பட்டனர்.

பல வலதுசாரி அமைப்புகள் கோர்ட் வளாகத்தில் போராட்டத்தை நடத்தியதுடன், நீதிமன்றத்தில் "பாரத் மாதா கி ஜெய்" என்ற முழக்கங்களை எழுப்பினர். சிலர், காஷ்மீர் மாணவர்கள் மீது காலணிகள் மற்றும் ஷூக்களை வீசினர்.

ஆபாச பட நடிகையானார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மகள்.. ஊக்கம் கொடுத்த பெற்றோர்.. கொடுமை!

இந்த நிலையில்தான், கர்நாடகாவில் தீவிரமாக செயல்படக்கூடிய வலதுசாரி இயக்கமான, ஸ்ரீ ராம சேனா, இந்த 3 மாணவர்கள் நாக்கிற்கும் விலை நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை முழக்கமிட்ட காஷ்மீர் மாணவர்களின் 'நாக்கை நறுக்குவோர்' வெகுமதியாக ரூ .3 லட்சம் பெறுவார்கள் என்று, ஸ்ரீ ராமசேனாவின் கவுரவ செயலாளர் சித்தலிங்க சுவாமி அறிவித்துள்ளார்.

தேசவிரோதிகளுக்கு இந்த நாட்டில் இடமில்லை. சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்த நாள் விழாவையொட்டி நான் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். இந்தியாவால் வளர்க்கப்பட்டு, தற்போது சிறையில் இருக்கும் பாகிஸ்தான் ஆதரவு மாணவர்கள் நாக்குகளை, யார் துண்டிக்க முடியும்? அந்த நாக்குகளை கொண்டு வாருங்கள், ஸ்ரீ ராமசேனா ஒவ்வொரு நாக்கும் ரூ .1 லட்சம் கொடுக்கும். எனவே மொத்தம் ரூ .3 லட்சம் வெகுமதியாக வழங்கப்படும். இவ்வாறு சித்தலிங்க சுவாமி அறிவித்துள்ளார். இந்த பேச்சு வீடியோ இப்போது வைரலாக சுற்றி வருகிறது.

 
 
 
English summary
Siddalinga Swami, a honorary secretary of the Sri Ram Sena grabbed the headlines after reportedly announcing Rs 3 lakh as a reward for those who would 'chop off the tongues' of the Kashmiri students who were chanting pro-Pakistan slogans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X