பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இறந்த பிச்சைக்காரரின் செயற்கைக் காலில் விதவிதமாய் ரூபாய் நோட்டுகள்.. ஷாக் ஆன போலீசார்!

இறந்த பிச்சைக்காரரின் செயற்கைக் காலில் ரூ. 96 ஆயிரம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இறந்த பிச்சைக்காரரிடம் விதவிதமாய் ரூபாய் நோட்டுகள், அதிர்ச்சியில் போலீசார்!- வீடியோ

    பெங்களூரு: ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த பிச்சைக்காரரின் செயற்கைக் காலில் இருந்து ஏராளமான பணம் மீட்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடக்க இயலாத மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் காலை திடீரென உயிரிழந்தார்.

    rs 96000 found in dead beggars artificial leg

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்நபரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அவரின் உடல் கனமாக இருந்ததால், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அவரது செயற்கைக் காலை அகற்றினர்.

    அதில் ஏராளமான ரூபாய் மற்றும் சில்லரைக் காசுகள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். அதாவது, 42 நோட்டுகள் ரூ.500, 470 நோட்டுகள் ரூ.100, 20 நோட்டுகள் ரூ.200, 215 நோட்டுகள் ரூ.50, 430 நோட்டுகள் ரூ.20, 528 நோட்டுகள் ரூ.10 என மொத்தம் ரூ. 96 ஆயிரம் இருந்துள்ளது.

    கிட்டத்தட்ட லட்சாதிபதியாக இருந்த அந்த பிச்சைக்காரர் யார் என போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஷரீப் என்றும் தெரிய வந்துள்ளது. திருட்டு பயத்தில் அவர் தான் சேமித்த பணத்தை தனது செயற்கைக் காலில் மறைத்து வைத்திருந்துள்ளார்.

    English summary
    A 75-year-old beggar Shareef Sab, originally from Hyderabad was found dead, here in front of his usual post, the cantonment railway station. The High Grounds police reached the scene when passersby alerted them on Tuesday Morning at 10 AM.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X