ஆர்எஸ்எஸ்-க்கு ”சித்தராமையா” என்றால் பயம்.. ரூ.30 கோடிக்கு எம்எல்ஏக்களை வாங்குறாங்க -அவரே சொல்றாரு
பெங்களூரு: பாரதிய ஜனதா கட்சி பாவத்தால் சம்பாதித்த பணத்தை கொண்டு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை வாங்கி வருவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மகாராஷ்டிராவில் நடந்து வரும் குதிரைபேர அரசியலை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
டெல்லி போட்டுத்தந்த ரூட்? 12 மணி நேரத்தில் 2 பெரிய மூவ்.. எடப்பாடி டீமை தண்ணி குடிக்க வைத்த ஓபிஎஸ்!
"பாஜக தலைவர்கள் ஜனநாயகத்தை காப்பாற்றப்போவதாக கூறுகிறார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் பாஜக செய்வது என்ன?

ஆபரேஷன் தாமரை
நெருக்கடி நிலையை அமல்படுத்தியது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று பேசி வருகிறார்கள். அப்படியென்றால் இப்போது அவர்கள் செய்து வருவது என்ன? கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்த அரசுகளை சட்டவிரோதமாக யார் கவிழ்த்தது? யார் ஆபரேஷன் தாமரையை தொடங்கியது? ஆபரேஷன் தாமரை மூலம் விலைக்கு வாங்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.30 கோடி பணம் வழங்கப்பட்டது.

விலைக்கு வாங்கப்படும் எம்.எல்.ஏக்கள்
பாஜகவிடம் இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது? ஆட்சியும் அதிகாரமும் பணமும் இருப்பதால் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கிறார்கள். ஆப்பரேஷன் தாமரை ஜனநாயகத்திற்கே எதிரானது. பாவத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை கொண்டு பாஜக எதிர்க்கட்சிகளுடைய எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறது. கர்நாடகாவில் இனி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியாது.

ஆர்.எஸ்.எஸ்க்கு என்னை பார்த்தால் பயம்
நடந்து முடிந்த சட்ட மேலவைத் தேர்தலில் எத்தனை இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தன்னை தானே முதலமைச்சர் என்று அறிவித்துக் கொள்கிறார். ஆனால், உண்மையில் யாருக்கு மக்களின் ஆதரவு உள்ளதோ அவரே முதலமைச்சராக முடியும். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு என்னை பார்த்தாலே பயம். எனவேதான் என் மீது கடும் விமர்சனங்களை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

மகாராஷ்டிரா குழப்பம்
கடந்த 21ம் தேதி பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் உள்ள ஹோட்டலில் மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான 34 சிவசேனா மற்றும் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆளும் அரசுக்கு எதிராக முகாமிட்டனர். அதன் பின்னர் பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு கடந்த 4 நாட்களில் மட்டும் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் 40 ஆக அவர்களின் பலம் அதிகரித்து ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.