பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது.. ஏன் சொல்றீங்க.. ரஷ்ய கொரோனா தடுப்பூசி பற்றி கிரண் மஜும்தார் பொளேர்

Google Oneindia Tamil News

பெங்களூர்: கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜும்தார் ஷா.

Recommended Video

    Russia Corona Vaccine| Why India may have to wait longer? | Sputnik V Vaccine | Oneindia Tamil

    கொரோனா வைரஸுக்கு எதிரான முதல் தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக கடந்த 11ஆம் தேதி ரஷ்யா அறிவித்தது.

    மாஸ்கோவை சேர்ந்த கமலேயா தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் தேசிய ஆராய்ச்சி மையம் இந்த தடுப்பூசியை தயாரித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல்.. தமிழகம் முழுக்க சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு! கொரோனா பரவல்.. தமிழகம் முழுக்க சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு!

    ரஷ்யா அறிவிப்பு

    ரஷ்யா அறிவிப்பு

    இதன் மூலம் உலகத்திலேயே கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை அறிமுகப்படுத்திய முதல் நாடு தங்களுடையது என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார். ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளோ, 2 மனித டிரையல் மட்டுமே முடிவடைந்த நிலையில், இந்த தடுப்பூசியை ஏற்க முடியாது என்று கூறி வருகின்றன.

    உலக சுகாதார அமைப்பு

    உலக சுகாதார அமைப்பு

    உலக சுகாதார ஆய்வு அமைப்பு, ரஷ்ய தடுப்பூசி முழுவதுமாக பரிசோதனைக்கு உட்பட வில்லை என்று கூறியுள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷா இதுபற்றி கருத்து கூறியுள்ளார்.

    முதல் தடுப்பூசி இல்லை

    முதல் தடுப்பூசி இல்லை

    ரஷ்யா தயாரித்து உள்ளதாக கூறப்படும் இந்த மருந்து தொடர்பான எந்த ஒரு டேட்டாவும் உலகநாடுகளுக்கு தரப்படவில்லை. முதல் மற்றும் இரண்டாவது கட்ட சோதனைகள் பற்றிய விபரமும் தெரிவிக்கப்படவில்லை. மூன்றாவது கட்ட பரிசோதனைகள் நடத்தப்படாமல் ஒரு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது நல்லது என்று ரஷ்ய நினைத்தால் அது அவர்களுடைய கருத்து. இதற்காக உலகத்தின் முதல் தடுப்பூசி தங்களுடையது என்று ரஷ்யா கூறிவிடமுடியாது. இந்த தடுப்பூசியை விடவும் இன்னும் பல தடுப்பூசிகள் அட்வான்ஸ் நிலையில் ஆய்வுப் பணியில் உள்ளன. இவ்வாறு கிரண் மஜூம்தார் ஷா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    டிரையல்கள்

    டிரையல்கள்

    ஸ்பூட்னிக்-5 என்ற பெயரில் ரஷ்யா அறிமுகம் செய்துள்ள தடுப்பூசி உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கான, மனித அடினோ வைரஸை அடிப்படையாகக் கொண்டது. இது சீனாவின் கேன்சினோ பயோலாஜிக்ஸ் உருவாக்கும் தடுப்பூசியை போன்றது என்று கூறப்படுகிறது. கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியாக, 100க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் உருவாக்கப்படுகின்றன. உலக சுகாதார ஆய்வு அமைப்பின் தரவுப்படி குறைந்தது நான்கு தடுப்பூசி நிறுவனங்கள், 3வது கட்ட மனித சோதனைகளில் உள்ளன.

    English summary
    Biocon Executive Chairperson Kiran Mazumdar-Shaw has questioned claims of Russia developing the world's first vaccine against COVID-19, citing absence of clinical trials data on and "more advanced" programmes elsewhere.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X