பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னா ஒரு சேட்டை.. காரை பல்லால் கடித்து பிறாண்டிய புலி.. செம வீடியோ!

Google Oneindia Tamil News

பெங்களுரு : பெங்களுரு உயிரியல் பூங்காவில் புலி ஒன்று சஃபாரி காரின் பின்பகுதியை தனது கூர்மையான பற்களால் கடித்து இழுத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பெங்களுரு பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில், சுற்றுலா பயணிகள் வந்த சஃபாரி காரின் பின் பகுதியை தனது கூர்மையான பற்களைக் கொண்டு கடித்து குதறி உள்ளது. பெரிய பூனை ஒன்றை கடித்து இழுப்பது போன்று காரை இழுத்துள்ளது. அது என்ன நினைத்து காரைப் போட்டு இப்படி கடித்ததோ தெரியவில்லை!

Santosh , Priya has joined today in our team - check her news and suggest her

இந்த காட்சியை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். ஒன்றரை நிமிடம் கொண்ட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. புலி தனது பற்களால் காரின் பம்பர் பகுதியை கடித்து இழுப்பதும், அதே சமயத்தில் காரின் டிரைவர் காரை பின்நோக்கி நகர்த்துகிறார்.

சசிகலா, ஓம் பிரகாஷ் சவுதாலா, லாலு பிரசாத் யாதவ்... தலைகளோ சிறைகளில் குழப்பமோ அறைகளில்சசிகலா, ஓம் பிரகாஷ் சவுதாலா, லாலு பிரசாத் யாதவ்... தலைகளோ சிறைகளில் குழப்பமோ அறைகளில்

அப்போதும் புலி, காரை கடிப்பதை நிறுத்தாமல் பின்னோக்கி செல்வதாக அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த காட்சி, புலி தனது பற்களால் காரை பின்னோக்கி இழுப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
புலி காரை கடிக்கும் சமயத்தில் டிரைவர் காரை ரிவர்ஸ் எடுத்த காட்சி, புலி தான் காரை கடித்து இழுப்பதாக பார்ப்பவர்களை நினைக்க வைக்கிறது. இது தான் இந்த வீடியோ வைரலாகி வருவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்த வீடியோ பதிவிடப்பட்டு 3 நாட்களே ஆகும் நிலையில், இதுவரை இந்த வீடியோ 18,000 முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் பலரும் இது பற்றிய தங்களின் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். கடந்த வாரம் இமாச்சல பிரதேசத்தில் சிறுத்தை ஒன்று சுற்றுலா பயணிகள் சிலருடன் விளையாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப் பெரிய அளவில் வைரலானது.

English summary
In Bengaluru biological park the tiger trying to pulling the safari car with its teeth. The one and a half minute video goes viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X