பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒன்னா இருக்க கத்துக்கணும்.. இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்.. தினகரனிடம் ஓங்கி உரைத்த சசிகலா!

Google Oneindia Tamil News

பெங்களூர்: தினகரன் மற்றும் எம்எல்ஏக்களிடம் சசிகலா ஒற்றுமையாக இருக்குமாறும் அப்படியில்லாவிட்டாலும் அழிவு நமக்குதான் என்றும் அறிவுறித்தியுள்ளார்.

அதிமுக தன் குடும்பத்தை விட்டு போகக் கூடாது என்பதில் சசிகலா உறுதியாக உள்ளார். அதற்காக அவ்வப்போது சிறையில் இருந்தபடியே பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து தகுதிநீக்க வழக்கை எதிர்ப்பார்த்து காத்திருந்தார். ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. தினகரனுடன் வந்ததால் 18 பேரும் பதவி இழந்தனர்.

திமுகவில்

திமுகவில்

இந்த நிலையில் எம்எல்ஏ பதவி போனால் பரவாயில்லை, அமமுகவுக்காக நாமே செலவு செய்து சம்பாதித்த பணத்தை அழித்துக் கொள்ளக் கூடாது என நினைத்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்துவிட்டார்.

பயம்

பயம்

இதையடுத்து அடுத்து இன்னும் யாராவது கட்சி தாவுவார்களா என்ற அச்சம் தினகரனிடம் ஏற்பட்டுவிட்டது. என்னதான் ஒரு சிலர் செல்வதால் கட்சி அழிந்துவிடுமா என தினகரன் கேட்டாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

அலசல்

அலசல்

இந்நிலையில் நேற்று பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் மற்றும் சில தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் போய் சந்தித்தனர். அப்போது செந்தில் பாலாஜி கட்சித் தாவல், கட்சியை பராமரித்தல் குறித்த விஷயங்களை அலசியுள்ளதாகவே தெரிகிறது.

துவம்சம்

துவம்சம்

தினகரனிடம் சசிகலா சற்று கடுமை காட்டியதாகவே கூறப்படுகிறது. தினகரன் குரூப்பிடம் சசிகலா கூறுகையில் ஒற்றுமை என்ற இலக்கை நாம் அடைய வேண்டும். அப்போதுதான் எதிரிகளை துவம்சம் செய்ய முடியும்.

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

இதுபோல் பிரிந்து காணப்படுவதும், மற்ற கட்சிகள் கொடுக்கும் பணத்துக்கு ஆசைப்படுவதுமாக இருந்தால் நஷ்டம் நமக்குத்தான். ஒரு சிங்கம், 4 எருதுகள் கதை சின்ன வயதில் படித்தது நினைவிருக்கிறதா என்று கேட்டதாக பெயர் சொல்ல விரும்பாத நிர்வாகிகள் கூறுகின்றனர்.

திமுகவுடன்

திமுகவுடன்

இவ்வாறு ஆளுக்கொரு திசையாக இருந்தால் நமது எதிரிகளான பாஜக, அதிமுக, திமுக ஆகியோரின் கரங்கள் பலப்படும். ஏற்கெனவே காங்கிரஸுடன் நாம் சேரும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்கள். இதனால் தற்போது திமுகவுடன் காங்கிரஸ் சென்றுவிட்டது.

கற்பிக்க

கற்பிக்க

எத்தனை விஷயங்கள் சுதாரிப்பாக இல்லாததால் தோல்வியில் முடிந்துள்ளது என்பதை நினைத்து பாருங்கள். எனவே ஒற்றுமை என்ற இலக்குடன் தேர்தலை சந்தித்து நமது பலத்தை நிரூபிப்போம். இதன் மூலம் எதிரிகள் பாடம் கற்பிக்க வைத்து விடலாம்.

கண்டிப்பு

கண்டிப்பு

மேலும் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள். அமமுக என்ற அமைப்பு ரீதியான உருவம் நம்மிடம் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் பலம் நம்மிடம் உள்ளது. எனவே எந்தவித குழப்பமுமின்றி எதற்கும் சபலப்படாமல் வெற்றிகளை குவித்தால் எதிரிகள் தோற்பது நிச்சயம் என்று சசிகலா தினகரனிடம் கடுமையாகவும் அறிவுறுத்தியும் கூறியுள்ளார்.

English summary
Sasikala advices TTV Dinakaran and group to be unite, then only we can able to attack our enemies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X