பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தீவிர சிகிச்சையில் உள்ள சசிகலாவுக்கு கொரோனா இல்லை.. RT-PCR பரிசோதனையிலும் உறுதி

Google Oneindia Tamil News

பெங்களூரு: சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது. இந்நிலையில் சசிகலாவுக்கு RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    சசிகலாவுக்கு கொரோனா இல்லை... மீண்டும் மூச்சுத்திணறல்… ஐசியூ-வில் தீவிர சிகிச்சை!

    சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா கடந்த ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். அவர் வரும் 27-ஆம் தேதி விடுதலையாகிறார்.

    Sasikala has corona negative, confirmed in RT-PCR test as well

    இன்னும் சில 6 நாட்களில் தமிழகம் திரும்ப உள்ள நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்ததால், பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார்

    அங்கு சசிகலாவுக்க நடத்தப்பட்ட பரிசோதனையில் சசிகலாவுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னையுடன், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தது. அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்து இருந்ததால் பிராண வாயு செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் சிசிக்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

    ஆனால் அதன் பின்னர் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சூழலில் சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டது. இந்நிலையில் சசிகலாவுக்கு RT-PCRல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    A RAPID test for Sasikala found no corona infection. and then test taken on Sasikala in RT-PCR also showed that the corona negative
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X