பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமமுகவுக்கு ஹேப்பி நியூஸ்.. சசிகலா நல்ல நலம்.. தொற்று முழுமையாக நீங்கி விட்டதாகவும் தகவல்!

சசிகலா பூரண குணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் முழுமையாக நீங்கிவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், எனினும் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    ரொம்ப நல்லா இருக்கார் சசிகலா.. சாப்பிடுகிறார், நடக்கிறார்… மருத்துவமனை அறிக்கை..!

    சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.. முதலில் மூச்சுத்திணறல் காரணமாகத்தான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. அங்கு உடல் நலம் தேறிய நிலையில், அன்றைய தினம் நடுராத்திரி மறுபடியும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

     Sasikala recovered from the Corona infection

    அதனால், மீண்டும் ஐசியூவில் மாற்றப்பட்டு, அங்கிருந்து விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.. இப்போதும் அங்குதான் சிகிச்சையில் உள்ளார்.. சசிகலாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

    இன்றுகாலை 8 மணிக்குகூட ஒரு அறிவிப்பு வந்தது.. அதில், கொரோனா அறிகுறிகள் சசிகலாவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.. மேலும் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.. முதல் நாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது, அவருடைய ஆக்ஸிஜன் அளவு 79 சதவீதம் இருந்தது... ஆனால், இன்று காலை 98 சதவீதமாக இருந்தது.

    இந்நிலையில், பிற்பகல் 3 மணிக்கு இன்னொரு அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் மறுபடியும் வெளியிட்டது. அது தற்போதுதான் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்த அறிக்கையில், சசிகலா பரிபூரணமாக குணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட சசிகலா இப்போது நல்ல முன்னேற்றம் அடைந்துவிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்ல, இன்னைக்கு காலையில் கூட லேசான தொற்று அறிகுறிகள் இருந்திருக்கிறது.. ஆனால், இப்போது அந்த அறிகுறிகூட இல்லை என்றும், சர்க்கரை அளவுகூட இன்று காலை அதிகமாக இருந்து, தற்போது குறைந்துவிட்டதாகவும் டாக்டர்கள் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும் தொடர் கண்காணிப்பிலேயே சசிகலா இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

    இப்போதைக்கு ஐசியூவில் தான் சசிகலா இருக்கிறார்.. ஐசியூவில் இருக்கிறாரே தவிர, மற்றபடி சிகிச்சை சாதாரண முறையில்தான் தரப்படுகிறதாம்.. இப்போதே சாதாரண வார்டுக்கு அவரை மாற்றலாம் என்றாலும், ஒரு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை கருதி, ஐசியூவிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்.. அநேகமாக இன்று இரவு, அல்லது நாளை காலையே சாதாரண வார்டுக்கு சசிகலா மாற்றப்பட்டு விடுவார் என்கிறார்கள்.

    அன்னிக்கு அடிச்சது அன்னிக்கு அடிச்சது "3 அடி".. வெளியே வந்ததும் "ஒரே அடி".. அதிர வைக்க போகும் சசிகலா!

    வருகிற 27ஆம் தேதி சசிகலாவுக்கு விடுதலை நாள் குறிக்கப்பட்ட நிலையில், திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விடவும், அவரது வருகை தள்ளிப்போடப்படுமா என்ற சந்தேகம் இருந்தது.. ஆனால், இப்போது சசிகலா குணமடைந்துவிட்டதால், திட்டமிட்டபடியே அதே 27-ம்தேதி விடுதலையாகிவிடுவார் என்று நம்பப்படுகிறது. வழக்கமான கைதிகளுடன் சசிகலாவை விடுதலை செய்யாமல் அவரது பாதுகாப்பு கருதி, தாமதமாக விடுதலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது..

    அதாவது, மற்ற கைதிகள் இரவு 7.30 மணிக்கும், சசிகலாவை 9.30 மணிக்கும் விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவ்வளவு சீக்கிரம் சசிகலா குணமடைந்துள்ள தகவல், அமமுக தரப்பினரிடையேயும், மற்றும் அதிமுகவின் ஒரு சில தரப்பினரிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தி வருகிறது!

    English summary
    Sasikala recovered from the Corona infection
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X