பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆகஸ்ட் மாதம் சசிகலா ரிலீஸ்.. தீயாய் பரவும் செய்தி.. பெங்களூர் சிறைத்துறை பதில் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் சிறையில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் சசிகலா ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், சிறைத்துறை நிர்வாகம் அதை மறுத்துள்ளது.

Recommended Video

    Sasikala Release செய்தியை மறுத்த பெங்களூர் சிறைத்துறை

    சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா.

    இதே வழக்கில் தண்டனை பெற்ற இளவரசி, திவாகரன் ஆகியோரும் அதே மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 4 வருட தண்டனை காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதாக நேற்று சில தகவல்கள் பரவின.

    ஆகஸ்ட் 14ம் தேதி சிறையிலிருந்து சசிகலா விடுதலை.. பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி பரபரப்பு தகவல்ஆகஸ்ட் 14ம் தேதி சிறையிலிருந்து சசிகலா விடுதலை.. பாஜக பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி பரபரப்பு தகவல்

    பாஜக பிரமுகர்

    பாஜக பிரமுகர்

    பாஜக பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி தனது ட்விட்டர் பதிவில் கூட இவ்வாறு ஒரு தகவலை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பெங்களூரு சிறைத்துறை வட்டாரங்களிடம் விசாரித்தபோது, அவர்கள் அதுபோன்ற எந்த ஒரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறார்கள். இது வதந்தி என்று சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

    வதந்தி

    வதந்தி

    சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெங்களூர் சிறையில் நிர்வாகத்திடம் சசிகலா விடுதலை தேதி பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிறைத்துறை நிர்வாகம் சரியான தேதியை இப்போது கூற முடியாது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    சட்டசபை தேர்தல்

    சட்டசபை தேர்தல்

    நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் என்பதால், இதுபோன்ற மூவ்கள் எடுத்து வரப்படுவதாகவும், தகவல்கள் வெளியாகின.

    நன்னடத்தை

    நன்னடத்தை

    பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் எதுவும் பொருந்தாது என்றும், தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என்றும் கர்நாடக சிறைத்துறை இயக்குநராக இருந்த என்.எஸ்.மெக்ரிக் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், திடீரென வதந்தி பரவியுள்ளது.

    English summary
    The rumors of the Sasikala release being released from the Bangalore jail in August have been denied by the prison administration.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X