• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பெங்களூர் கலவரம்: எஸ்டிபிஐ நிர்வாகி கைது.. வீடு வீடாக சென்று கைது செய்வோம்.. அமைச்சர் வார்னிங்

|

பெங்களூர்: பெங்களூர் நகரில் எம்எல்ஏ வீடு எரிக்கப்பட்டது மற்றும் காவல் நிலையம் சூறையாடப்பட்டது போன்ற வன்முறை சம்பவம் தொடர்பாக எஸ்டிபிஐ அமைப்பின் முக்கிய தலைவர் முஷாமில் பாஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

  பெங்களூர் கலவரம்.. நள்ளிரவில் என்ன நடந்தது?

  இதனிடையே, கர்நாடக அமைச்சர் சிடி ரவி, அளித்த ஒரு பேட்டியில், இந்த தாக்குதலின் பின்னணியில் பயங்கர சதித் திட்டம் இருக்கிறது.. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்காக எப்படி ஒரே நேரத்தில் ஒன்று கூட முடியும்.

  இதுதொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்டிபிஐ அமைப்பு இதன் பின்னணியில் இருக்கிறது என்பதுதான் இவ்வளவு பெரிய வன்முறைக்கும் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

  Exclusive: உதவிக்கு வர மாட்டாங்க, சுடுங்க.. உத்தரவிட்ட அதிகாரி! பரபர பெங்களூர் போலீஸ் உரையாடல் ஆடியோ

  கொலை திட்டம்

  கொலை திட்டம்

  இதனிடையே பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய வருவாய் துறை அமைச்சருமான அசோகா, "எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியை கொலைசெய்யும் திட்டத்தோடு அந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டு உள்ளது. வீட்டில் இருந்த புடவை உள்ளிட்ட துணிகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.

  விட மாட்டோம்

  விட மாட்டோம்

  இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தேசவிரோதிகள். அவர்கள் யாராக இருந்தாலும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை துணை கமிஷனரையே முற்றுகையிட்டு காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு அவர்களுக்கு தைரியம் வந்துவிட்டது. இதற்கு மேலும் இதை விட மாட்டோம்.

  கடும் நடவடிக்கை

  கடும் நடவடிக்கை

  வீடு வீடாகச் சென்று, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்களோ அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அசோகா தெரிவித்தார். இந்த வன்முறைச் சம்பவத்தில் கேரளாவிலிருந்து வந்த எஸ்டிபிஐ கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  கேரளா தொடர்பு

  கேரளா தொடர்பு

  போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. அவர் கேரளாவில் இருந்து வந்தவராக இருக்கக்கூடும் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. 2009 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட, சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) என்பது அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ)வின் அரசியல் அமைப்பாகும்.

  கேரள முதல்வர்

  கேரள முதல்வர்

  எஸ்.டி.பி.ஐ நாடு முழுவதும் குடியுரிமை எதிர்ப்பு சட்ட எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்ததில் முக்கிய பங்கு வகித்தது. மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துவதற்காக இந்த கட்சி சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தை பயன்படுத்துவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Bangalore violence: The attackers were anti nationals says, Karnataka Minister R.Ashoka, We will not spare them, he added. SDPI party man arrested by the police.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X