பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிகே சிவக்குமாரின் மகளிடம் அமலாக்கத்துறை பலமணிநேரம் கிடுக்குப்பிடி விசாரணை

Google Oneindia Tamil News

Recommended Video

    கண்ணீர் விட்ட டிகே சிவக்குமார்.. ஆடிப்போன காங்.தலைவர்கள் | Who is DK Shiva Kumar?

    டெல்லி: சட்டவிரோத பணதடுப்பு சட்டத்தின்படி காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் இன்று 8 மணிநேரத்துக்கும் அதிகமாக கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

    கர்நாடகா முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டிகே சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 3ம் தேதி சட்டவிரோத பண தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    கைது செய்வதற்கு முன்னதாக டிகே சிவக்குமாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லியில் நான்கு நாட்கள் விசாரணை நடத்தினர். அதன்பிறகு தான் சிவக்குமாரை அதிகாரிகள் கைது செய்தனர்.

    திமுகவில் 70 வயசு வரை இளைஞரணியில் இருக்கலாம்.. அன்பில் மகேஷுக்கு நறுக் பதில் அளித்த அமைச்சர்திமுகவில் 70 வயசு வரை இளைஞரணியில் இருக்கலாம்.. அன்பில் மகேஷுக்கு நறுக் பதில் அளித்த அமைச்சர்

    சிவக்குமார் முதலீடு

    சிவக்குமார் முதலீடு

    டிகே சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யா நிர்வாக மேலாண்மை பட்டம் பெற்றவர் ஆவார். தனது மகளின் பெயரில் பணத்தை முதலீடு செய்திருப்பதாக டிகே சிவக்குமார் விசாரணையில் கூறியிருந்தார்.

    பல கல்லூரிகள் நடத்துகிறது

    பல கல்லூரிகள் நடத்துகிறது

    டிகே சிவக்குமாரும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் ஒரு அறக்கட்டளையில் உறுப்பினராக உள்ளனர். இந்த அறக்கட்டளை அமைப்பு பல கல்லூரிகளை நடத்தி வருகிறது.

    அமலாக்கத்துறை விசாரணை

    அமலாக்கத்துறை விசாரணை

    இந்த நிலையில் ஐஸ்வர்யாவை விசாரணைக்கு டெல்லியில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். இதன்படி டெல்லி சென்ற ஐஸ்வர்யாவிடம் 8 மணிநேரத்துக்கும் அதிகமாக கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

    சிவக்குமார் மகன் சுரேஷ் கேள்வி

    சிவக்குமார் மகன் சுரேஷ் கேள்வி

    இது தொடர்பாக டிகே சிவக்குமாரின் மகனும் ஐஸ்வர்யாவின் சகோதரருமான சுரேஷ் கூறுகையில், ஐஸ்வர்யா நாளை (இன்று) அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள உள்ளார். சட்டம் அனைவருக்கும் பொருந்தும் தான். அவள் மிகவும் தைரியமான பெண், சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் விசாரிக்க விரும்பினால் தாராளமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கலாம். ஆனால் இதேபோல் அவர்கள் மற்ற தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் விசாரிக்க வேண்டும் என்றார்.

    English summary
    Senior Congress leader D K Shivakumar's daughter Aisshwarya to be questioned today by the Enforcement Directorate
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X