பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடாக உள்ளாட்சித் தேர்தல்: 506 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் அசத்தல்.. பாஜகவுக்கு பின்னடைவு!

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவிற்கு பின்னடைவு

    பெங்களூர்: கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. லோக்சபா தேர்தலில் அம்மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    நாட்டின் 17வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 23ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    அதன்படி நாடு முழுவதும் பாஜக பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்தது பாஜக.

    இந்தி கட்டாயம் இல்லை... இது அழகான தீர்வு.. மத்திய அரசுக்கு சபாஷ் போட்ட ஏ.ஆர். ரஹ்மான் இந்தி கட்டாயம் இல்லை... இது அழகான தீர்வு.. மத்திய அரசுக்கு சபாஷ் போட்ட ஏ.ஆர். ரஹ்மான்

    அள்ளிய பாஜக

    அள்ளிய பாஜக

    லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் பாஜக 25 இடங்களை அள்ளியது. காங்கிஸ் கட்சிக்கு ஒரே ஒரு இடம் தான் கிடைத்தது.

    வெளியாகும் முடிவுகள்

    வெளியாகும் முடிவுகள்

    இந்நிலையில் அம்மாநில உள்ளாட்சித் தேர்தல் கடந்த மே 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது.

    பாஜகவுக்கு பின்னடைவு

    பாஜகவுக்கு பின்னடைவு

    கர்நாடகாவில் 1361 வார்டுகள், 8 மாநகராட்சி, 33 நகராட்சி, 22 நகர பஞ்சாயத்துக்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்னமும் வெளியாகிக்கொண்டிருக்கிறது. இதில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அதிக இடங்களை மேற்கொண்டுள்ளது.

    காங்கிரஸ்க்கு 509 வார்டுகள்

    காங்கிரஸ்க்கு 509 வார்டுகள்

    காலை 8.30 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 509 இடங்களையும் பாஜக 336 இடங்களையும், மஜத 174 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. சுயேட்சை வேட்பாளர்கள் 160 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் பிஎஸ்பி 3 இடங்களையும் சிபிஎம் 2 இடங்களையும் பெற்றுள்ளது.

    நகர பஞ்சாயத்துகளில் பாஜக

    நகர பஞ்சாயத்துகளில் பாஜக

    இதுவரை முடிவு அறிவிக்கப்பட்ட 290 நகர பஞ்சாயத்து வார்டுகளில் பாஜக 126 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 97 வார்டுகளை வென்றுள்ளது. மஜக 34 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

    நகராட்சி வார்டுகளில் காங்கிரஸ்

    நகராட்சி வார்டுகளில் காங்கிரஸ்

    முடிவு அறிவிக்கப்பட்ட 714 நகராட்சி வார்டுகளில் பாஜக 184 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் காங்கிரஸ் 322 வார்டுகளை கைப்பற்றி முன்னணியில் உள்ளது. மஜத 102 இடங்களை கைப்பற்றியுள்ளது.

    மாநகராட்சி வார்டுகளில் காங்கிரஸ்

    மாநகராட்சி வார்டுகளில் காங்கிரஸ்

    இதேபோல் முடிவு வெளியான 217 மாநகராட்சி வார்டுகளில் பாஜக 56 இடங்களையும் காங்கிரஸ் 90 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. மஜத 38 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

    காங்கிரஸ்க்குதான் ஆதரவு

    காங்கிரஸ்க்குதான் ஆதரவு

    உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து டிவிட்டரில் கர்நாடாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தினேஷ் குண்டூ ராவ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 1221 இடங்களில் காங்கிரஸ் 509 இடங்களை கைப்பற்றியுள்ளது. கர்நாடக நகராட்சி தேர்தலில் 42% இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியிருக்கிறது. இது கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்குதான் ஆதரவளிக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.

    முடிவு அதிர்ச்சியளிக்கிறது

    முடிவு அதிர்ச்சியளிக்கிறது

    லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக எப்படி இப்படி தோற்றது என்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படவேண்டும். இவ்வாறு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டூ ராவ் தெரிவித்துள்ளார்.

    சட்டசபை தேர்தலில்

    சட்டசபை தேர்தலில்

    கடந்த ஆண்டு நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் 982 வார்டுகளையும் பாஜக 920 வார்டுகளையும் மஜத 375 வார்டுகளையும் , சுயேட்சைகள் 329 வார்டுகளையும் கைப்பற்றினர். இதேபோல் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக 107 இடங்களை கைப்பற்றிய நிலையில் 80 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சியும் 37 இடங்களில் வெற்றி பெற்ற மஜதவும் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Selback for BJP in Karnataka urban Local body elections. Congress wins 509 and BJP wins in 366 wards.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X