பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை உட்பட 5 நகரங்களில் டிஆர்டிஓ ஆய்வகம் துவக்கம்.. 35 வயதுக்கு கீழுள்ளவர்கள் மட்டுமே விஞ்ஞானிகள்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் இளம் விஞ்ஞானிகளுக்காக அமைக்கப்பட்ட, 5 ஆய்வகங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. தும்கூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று மாலை உரையாற்றிய அவர், பின்னர் பெங்களூரில் இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று 5 ஆய்வகங்களை இளம் விஞ்ஞானிகளாக அர்ப்பணித்தார்.

Setting up 5 labs in the field of Advanced Technologies: Narendra Modi

மேலும், அவர் பேசுகையில், வருங்கால விஞ்ஞான தொழில் நுட்பங்களை கருத்தில் கொண்டு ஐந்து ஆய்வகங்களை துவக்கி வைப்பதில் தான் திருப்தி அடைகிறேன். பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகியவற்றில் இந்த ஆய்வகங்கள் செயல்படும். இந்த நாட்டின் பிரதமராக நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். இந்த நாட்டில் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவை வழங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமர் அர்ப்பணித்துள்ள இந்த ஐந்து ஆய்வகங்களில் 35 வயதுக்கு குறைவான விஞ்ஞானிகள் மற்றும் இயக்குனர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். நாட்டின் பாதுகாப்பு கருவிகள் தொடர்பான புதிய உற்பத்தி யோசனைகள் மற்றும் ஆய்வுகள் இங்கே நடைபெறும்.

Setting up 5 labs in the field of Advanced Technologies: Narendra Modi

<strong>அரியலூரில் சிறுத்தைகள் ஹேப்பி.. திருமா.வின் தம்பி மனைவி அமோக வெற்றி.. தொண்டர்கள் உற்சாகம்! </strong>அரியலூரில் சிறுத்தைகள் ஹேப்பி.. திருமா.வின் தம்பி மனைவி அமோக வெற்றி.. தொண்டர்கள் உற்சாகம்!

புதிய ஐந்து டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகள் ஆய்வகங்கள்:

செயற்கை நுண்ணறிவு (பெங்களூரு)
குவாண்டம் டெக்னாலஜிஸ் (ஐ.ஐ.டி மும்பை)
அறிவாற்றல் தொழில்நுட்பங்கள் (ஐ.ஐ.டி சென்னை)
சமச்சீரற்ற தொழில்நுட்பங்கள் (கொல்கத்தா)
ஸ்மார்ட் பொருட்கள் (ஹைதராபாத்)

English summary
PM Modi in Bengaluru: I am satisfied that work was done sincerely on the suggestion of setting up 5 labs in the field of Advanced Technologies and today five such institutes are coming up in Bengaluru, Kolkata, Chennai, Hyderabad and Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X