பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Siddaramaiah: பொது இடத்தில் பெண்ணின் துப்பட்டாவை இழுத்தது ஏன்?- சித்தராமையா அடடே விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    மைக்கை பிடுங்க போய் கையில் வந்த பெண்ணின் துப்பட்டா.. சித்தராமையா வீடியோவால் பரபரப்பு!

    பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பரபரப்பு பேசு பொருளாக மாறியுள்ளது, அம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தராமையா செய்த ஒரு மோசமான செயல் தான்.

    மைசூர் மாவட்டத்தில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, பெண் ஒருவர் அவரிடம் வாய் தகராறு செய்த நிலையில், அந்தப் பெண்ணைத் தள்ளிவிட்டதோடு, அவர் சுடிதார் மீது அணிந்து இருந்த துப்பட்டாவை இழுத்த காட்சிகள் வீடியோவில் பதிவாகி வைரலாக சுற்றிவருகின்றன.

    தேசிய அளவில் இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய பெண்கள் ஆணையம் இந்த பிரச்சனை குறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, காவல்துறையை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

    துப்பட்டா

    துப்பட்டா

    சித்தராமையாவிடம் வாக்குவாதம் செய்த பெண் தனது துப்பட்டாவில் மைக்ரோபோன் வைத்திருந்ததாகவும், எனவே அதனை அகற்றுவதற்காக சித்தராமையா இவ்வாறு செய்ததாகவும், காங்கிரஸ் தலைவர்கள் வட்டாரம் தெரிவித்தது.

    தங்கச்சி மாதிரிங்க

    இந்த சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து, சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், வரும் தொகுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக அந்தப் பெண் முயற்சி செய்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது அந்தப் பெண்ணை எனக்கு பதினைந்து வருடங்களுக்கு மேலாக தெரியும் அவர் எனது சகோதரி போன்றவர் என்று தெரிவித்துள்ளார்.

    சிறந்த முதல்வர்

    இதில் மற்றொரு விஷயம் சித்தராமையாவுடன் வாக்குவாதம் செய்து துப்பட்டா இழுப்புக்கு உள்ளான ஜமலா என்ற அந்த பெண், சித்தராமையாவுக்கு வக்காலத்து வாங்கி உள்ளார். கர்நாடகா கண்ட சிறந்த முதல்வர் சித்தராமையாவாகும். எங்கள் தொகுதியில் உள்ள சில பிரச்சினைகள் தொடர்பாக நான்தான் ஆக்ரோஷமாக அவரிடம் பேசி விட்டேன்.

    தப்பு சித்தராமையா மீது இல்லை

    தப்பு சித்தராமையா மீது இல்லை

    முன்னாள் முதல்வரான அவரிடம், இவ்வாறு நான் பேசி இருக்கக் கூடாது. சித்தராமையா எதிரே இருந்த டேபிளை நான் வேகமாக தட்டியதால் தான் அவர் கோபப்பட்டு எழுந்தார். இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் உறுப்பினர்

    காங்கிரஸ் உறுப்பினர்

    சித்தராமையாவின் மகனும் எம்எல்ஏவுமான யதீந்திரா இதுபற்றி கூறுகையில், இந்த சம்பவத்திற்காக எனது தந்தை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தான் அந்த பெண்மணி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Former Karnataka chief minister and Congress leader Siddaramaiah issued a clarification after he misbehaved with a woman during a public meeting in Mysuru.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X