பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்!

சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட அல் உம்மா அமைப்பை சேர்ந்த மெஹபூபா ஷா என்பவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    எஸ்.ஐ.கொலையில் திருப்பம்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு

    பெங்களூர்: சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலையில் மூளையாக செயல்பட்ட அல் உம்மா அமைப்பை சேர்ந்த மெஹபூபா ஷா என்பவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலையின் விசாரணையில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலையில் போலீசார் நேற்றுதான் முழுமையான விசாரணையை முடித்தனர். இன்று வில்சன் கொலையில் குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இந்த கொலை குறித்து திடுக்கிடும் தகவல்களை கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விசாரணையில் தெரிவித்தனர். கடந்த வாரம் கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி!நிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி!

    எப்படி

    எப்படி

    இவரை கொலை செய்தவர்களை சிசிடிவி காட்சியின் உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசுக்கு கிடைத்த உளவுத் தகவலின்படி தீவிரவாத அமைப்பிற்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டது. அல் உம்மா இயக்கம் இந்த கொலையில் ஈடுப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது.

    போலீஸ் உதவி

    போலீஸ் உதவி

    இதையடுத்து கர்நாடக போலீஸ் , கேரளா போலீஸ் உதவியுடன் தமிழக போலீஸ் தீவிரமாக கொலையாளிகளை தேடி வந்தது. இதன் மூலம் கொலையாளிக்கு துப்பாக்கி கொடுத்த இஜாஸ் பாஷா என்று நபர் கைது செய்யப்பட்டார். கொலையாளிகளுக்கு தாமே துப்பாக்கியை சப்ளை செய்ததாக இஜாஸ் கூறியுள்ளார்.

    தகவல் எப்படி

    தகவல் எப்படி

    இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நடந்த தேடுதல் வேட்டையில் கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் கொலையாளிகள் அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அதன்பின் கர்நாடக போலீசார் இவர்களை தமிழக போலீசிடம் ஒப்படைத்தனர்.இவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் இந்த கொலைக்கு மூளையாக வேறு ஒரு தீவிரவாதி செயல்பட்டதும்.

    யார் அவர்

    யார் அவர்

    அவர்தான் இந்த கொலைக்கு உத்தரவுகளை பிறப்பித்ததும் தெரிய வந்தது. அவர் பெங்களூரில் பதுங்கி இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது. இந்த நிலையில் பெங்களூர் போலீசார் தற்போது அவரையும் கைது செய்துள்ளனர்.

    மூளையாக செயல்பட்டவர்

    மூளையாக செயல்பட்டவர்

    அல் உம்மா அமைப்பை சேர்ந்த மெஹபூபா ஷா என்பவர்தான் கைது செய்யப்பட்டது. மெஹபூபா ஷா ஏற்கனவே பல்வேறு கொலைகளில் தீவிரமாக தேடப்பட்டு வந்தவர். இவர் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி வந்துள்ளார். மெஹபூபா ஷா பெங்களூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    English summary
    SI Wilson Murder Case: Main Terrorist Mehabooba Shah arrested in Bangalore today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X