பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கட்சிக்குள் சிலர் செய்த சதி.. கோபத்தில் கத்திய ராகுல் காந்தி.. சித்தராமையாவை குறி வைக்கிறாரா?

கர்நாடகாவில் குமாரசாமியின் பதவி விலகலுக்கு பின் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவின் சூழ்ச்சியும் இருப்பதாக கர்நாடக அரசியலில் பேசப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் குமாரசாமியின் பதவி விலகலுக்கு பின் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவின் சூழ்ச்சியும் காரணமாக இருப்பதாக கர்நாடக அரசியலில் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டி ஒன்று இன்னும் சர்ச்சையாகி உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி அரசு கவிழ்ந்துள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா இன்று முதல்வராக பதவி ஏற்க வாப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. 14 மாதங்களாக நீடித்த காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நேற்று முடிவிற்கு வந்தது.

குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத அரசு கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்து உள்ளது. இன்று எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவர் என்று கூறப்படுகிறது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் கர்நாடகாவில் குமாரசாமியின் பதவி விலகலுக்கு பின் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவின் சூழ்ச்சியும் காரணமாக இருப்பதாக கர்நாடக அரசியலில் பேசப்பட்டு வருகிறது. சித்தராமையா நினைத்து இருந்தால் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பதவி விலக விடாமல் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

யார்

யார்

அவர் வேண்டும் என்றே அமைதியாக இருந்துவிட்டார். அவருக்கு பதவி ஆசை இருந்தது. அதனால்தான் குமாரசாமி மீது வெறுப்பில் இருந்தார். இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தாலும் பிரச்சனை இல்லை என்று விட்டுவிட்டார். அவர் வேண்டும் என்றேதான் இப்படி செய்தார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

இந்த நிலையில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் - மஜத கூட்டணி உருவான நாளில் இருந்தே கர்நாடகாவில் சிலருக்கு அதில் விருப்பம் இல்லை. கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பலர் இந்த கூட்டணிக்கு எதிராக காய் நகர்த்தினார்கள், சதி செய்தார்கள். சிலரின் பதவி ஆசைக்கு இந்த கூட்டணி இடையூறாக இருப்பதாக அவர்கள் கருதினார்கள்.

விமர்சனம்

விமர்சனம்

அவர்களின் பேராசை தற்போது வென்றுவிட்டது. ஆனால் கர்நாடகாவின் ஜனநாயகம் தோல்வி அடைந்துவிட்டது. கர்நாடக மக்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள். சிலரின் பதவி வெறி மொத்தமாக எங்களுக்கு தோல்வியை தந்துவிட்டது. பதவி ஆசையோடு பணியாற்றினால் வெற்றிபெறவே முடியாது, என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

என்ன மறைமுகம்

என்ன மறைமுகம்

இந்த நிலையில் ராகுல் காந்தி மறைமுகமாக சித்தராமையாவைத்தான் விமர்சனம் செய்கிறார். சித்தராமையாவை குறிப்பிடும் விதமாகத்தான் அவர் இந்த பேட்டியை அளித்துள்ளார் என்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்குள் இந்த மோசமான சூழ்நிலையில் புதிய புயலை உருவாக்கி உள்ளது.

English summary
Siddaramaiah on Target: Some played against JDS - Congress alliance within the party says, Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X