பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சித்தராமையா சொன்ன ஒரு வார்த்தை.. மைக்கால் லீக்.. கடும் கோபத்தில் குமாரசாமி.. அரசு கலைந்த பின்னணி

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Assembly : பெரும் போராட்டம்.. நான்காவது முறையாக முதல்வராகும் எடியூரப்பா- வீடியோ

    பெங்களூர்: 22ம் தேதி திங்கள்கிழமை இரவு 10 மணி இருக்கும். கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடந்து கொண்டு இருந்தது.
    முதல்வர் எச்.டி. குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் ஆகியோர் அப்போது அவையில் இல்லை.

    சில காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் சட்டசபை குழு தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா அமர்ந்திருந்த சீட்டுக்கு அருகில் நின்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.

    அப்போது சித்தராமையா பேசிய சொற்கள் கூட்டணி கட்சியினருக்கு அதிர்ச்சியளித்திருக்கும். சித்தராமையாவின் முன்புறம் இருந்த மைக்ரோஃபோனில் அவர் பேசியது பதிவாகி, அவை முழுக்க அது எதிரொலித்தது.

    கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் இருப்பது எடியூரப்பா இல்லை.. யாருன்னு தெரிந்தால் ஷாக்தான்! கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் இருப்பது எடியூரப்பா இல்லை.. யாருன்னு தெரிந்தால் ஷாக்தான்!

    கிளம்புங்க காத்து வரட்டும்

    கிளம்புங்க காத்து வரட்டும்

    "ராஜீனாமே கொட்டு ஹோகலு ஹேலி" (அவரை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்) என்று சித்தராமையா கூறிய வார்த்தையை கேட்டறிந்த குமாரசாமி ஷாக்கில் உறைந்து போனார். ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி அரசை காப்பாற்றுவதில் காங்கிரஸ் உண்மையிலேயே தீவிரம் காட்டவில்லை என்ற கூற்றுகளுக்கு சித்தராமையா வார்த்தைகள் நம்பகத்தன்மையை அளித்துவிட்டன. குமாரசாமி பெரும்பான்மையை இழந்த பிறகு, பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்பதை போலத்தான் இருந்தது. அவர்கள் கேஷுவலாக உள்ளார்கள். மஜத வட்டாரத்தில்தான் சோகம் எதிரொலிக்கிறது.

    கூட்டணியால் அதிருப்தி

    கூட்டணியால் அதிருப்தி

    பெயர் சொல்ல விரும்பாத காங்கிரசை சேர்ந்த ஒரு மூத்த எம்.எல்.சி, கூறுகையில் "மஜதவுடனான, கூட்டணி காங்கிரஸ் கட்சிக்குதான் இழப்பு. பழைய மைசூர் பிராந்தியத்தில் கட்சி மோசமான நிலையில் உள்ளது. இந்த கூட்டணி, தேவகவுடா குடும்பம் மற்றும் டி.கே.சிவகுமார் போன்ற சில காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமே பலன் தந்தது. மக்களவை தேர்தல் முடிந்ததுமே உடனேயே கூட்டணியை முடிவுக்கு கொண்டுவர எங்கள் தலைவர்களில் பெரும்பாலானோர் விரும்பினர். அது ஒரு நாள் நடக்க வேண்டியிருந்தது. இப்போது நடந்துள்ளது. நாங்கள் இப்போது நிம்மதி அடைகிறோம். " என்றார்.

    அதிருப்தி

    அதிருப்தி

    காங்கிரசில், இன்னும் பலரும் இதே கருத்தில் உள்ளனர். பழைய மைசூர் பிராந்தியத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கூட்டணி குறித்து கடும் வருத்தத்தில் இருந்தனர். மேலும் சிலர் பகிரங்கமாக அதிருப்தியை வெளிப்படுத்தினர். கவுடாக்கள் (தேவகவுடா மற்றும் குடும்பத்தார்) இறுதியில் காங்கிரசை "காலி செய்வார்கள்" என்று வெளிப்படையாக கூறினர். நம்பிக்கை பற்றாக்குறை இந்த கூட்டணிக்குள் மிக அதிகமாக இருந்தது, கவுடாக்கள் எப்போதும் சித்தராமையாவை சந்தேகத்துடன் பார்த்தார்கள்.

    செயற்கை கூட்டணி

    செயற்கை கூட்டணி

    தேவேகவுடா மற்றும் மகன் குமாரசாமி இருவரும் பல சந்தர்ப்பங்களில் தங்கள் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தனர். குமாரசாமி கூட காங்கிரஸ் தன்னை செயல்பட அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் தகவல்படி, மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏதாவது செய்வேன் என்று சித்தராமையா அவர்களுக்கு உறுதியளித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் இருகட்சிக்குமே மிகவும் அதிர்ச்சியாக இருந்தன. ஆட்சியில் இருந்ததால், பொதுவான நலன்களைப் பாதுகாக்க அவர்கள் ஒன்றாக ஒட்டிக்கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இது செயற்கை கூட்டணி என்பது இப்போது நிரூபணம் ஆகியுள்ளது.

    English summary
    Both JD(S) supremo HD Deve Gowda and son HD Kumaraswamy had expressed their displeasure in public on many occasions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X