பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மஜதவிலிருந்து நானாக விலகவில்லை.. தேவகவுடாதான் என்னை நீக்கினார்.. சித்தராமையா பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

பெங்களூரு: ஜனதா தளம் கட்சியிலிருந்து நானாக விலகவில்லை, தேவகவுடாதான் என்னை நீக்கினார் என சித்தராமையா பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காலியாக உள்ள குந்துகோல், சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சிஞ்சோலி தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த உமேஷ் ஜாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

இதனால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதியில் தற்போது உமேஷ் ஜாதவின் மகன் அபினாஷ் ஜாதவ் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் தீவிரமாக உள்ளது.

நல்லது செய்திருந்தால்.. பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்திருப்போம்.. கனிமொழி பலே பேச்சு நல்லது செய்திருந்தால்.. பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்திருப்போம்.. கனிமொழி பலே பேச்சு

செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்கள் சந்திப்பு

உமேஷ் யாதவ் பாஜகவிடமிருந்து பல கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு காங்கிரஸில் இருந்து விலகியதாக சித்தராமையா தேர்தல் பிரசாரங்களில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு முன்னாள் துணை முதல்வர் அசோக் (பாஜக) செய்தியாளர்களை சந்தித்து பதிலடி கொடுத்தார்.

காங்கிரஸில் இணைந்து

காங்கிரஸில் இணைந்து

அப்போது அவர் கூறுகையில் உமேஷ் யாதவுக்கு பாஜக எதுவும் கொடுக்கவில்லை. அவருக்கு அமைச்சர் பதவி வழங்காததால் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். சித்தராமையா கூட முதலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியிலிருந்து விலகி அதன் பின்னர் காங்கிரஸில் இணைந்து முதல்வராகினார் என்றார்.

பாஜகவில்

பாஜகவில்

இந்த குற்றச்சாட்டு குறித்து சிஞ்சோலியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நான் விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததற்கும் உமேஷ் யாதவ் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததற்கும் வித்தியாசம் உள்ளது.

தேவகவுடா நீக்கினார்

தேவகவுடா நீக்கினார்

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியிலிருந்து நான் விலகவில்லை. அக்கட்சியில் இருக்கும் போது பல்வேறு அமைப்புகளுக்கு ஆதரவாக நான் இருந்தேன். அதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்து என்னை தேவகவுடா நீக்கினார்.

பொய் பேசுதல்

பொய் பேசுதல்

ஜனதா தளம் கட்சியிலிருந்து நானாக விலகி காங்கிரஸில் சேரவில்லை. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிறகு தேர்தலை எதிர்கொண்டுதான் வெற்றி பெற்றேன். இதனால் அசோக் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வருகிறார். பாஜகவினர் பொய் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்றார் சித்தராமையா.

English summary
Siddaramaiah says that he didnt quit from JDS. He was sacked by Deve Gowda and then he joined in Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X