பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசியாக போனில் 3 பேருடன் பேசிய சித்தார்த்தா.. யாருடன் பேசினார்?.. போலீஸ் விசாரணை

Google Oneindia Tamil News

பெங்களூர்: நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் கடைசியாக யாருக்கோ போன் செய்த சித்தார்த்தா யாருடன் பேசினார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஃபே காபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தா. இவர் நேற்று காரில் மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நேத்ராவதி ஆற்று பாலத்தில் காரை நிறுத்த கூறினார். பின்னர் காரை விட்டு இறங்கி அங்கு பாலத்தில் சிறிது நேரம் நடந்து செல்வதாக கூறிய சித்தார்த்தா நீண்ட நேரமாகியும் வரவில்லை.

Siddhartha called someone from his mobile

இதனால் சந்தேகமடைந்த டிரைவர், ஆற்றுப் பாலத்துக்கு சென்று தேடியுள்ளார். ஆனால் அவரை காணவில்லை. இதையடுத்து குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார். அவர்களது தகவலின் பேரில் தக்ஷின கன்னட போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் யாருடன் பேசினார் என்பது குறித்து செல்போன் எண்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் அவர் நேத்ராவதி ஆற்றின் பாலத்தின் மேலிருந்து யாருடனோ பேசியதாக செல்போன் சிக்னல் காட்டுகிறது என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

முக்கிய புள்ளி மிரட்டினார்? போலீசுக்கு கிடைத்த க்ளூ.. சித்தார்த் காணாமல் போகும் முன் நடந்தது என்ன? முக்கிய புள்ளி மிரட்டினார்? போலீசுக்கு கிடைத்த க்ளூ.. சித்தார்த் காணாமல் போகும் முன் நடந்தது என்ன?

அவரது போன் கால்களை ஆய்வு செய்ததில் அவர் மூன்று பேருடன் பேசியது தெரியவந்தது. டிரைவர், சிக்மக்ளூர் காபி டே கிளையின் மேனேஜர், பெங்களூர் கிளையின் மேனேஜர் ஆகியோருடன் போனில் பேசியுள்ளார். அவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Coffee day King Siddhartha phone signal shows last call which was made from Netravati Bridge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X