பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சித்தார்த்தாவின் ரிலாக்ஸ் வாக்கிங் கடைசியில் இறுதி நடையாக மாறிய சோகம்.. பரபரப்பு பின்னணி!

Google Oneindia Tamil News

Recommended Video

    Coffee Day Owner V. G. Siddhartha Missing : முன்னாள் முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகன் மாயம்

    பெங்களூர்: சித்தார்த்தா எப்போதாவது மனக்கவலை இருந்தால் அதை மறக்க காபி தோட்டத்தில் நடப்பாராம். அது போல்தான் நேத்ராவதி ஆற்றுப் பாலத்தின் மீதும் அவர் நடந்துள்ளார். இந்த நிலையில் அவர் மாயமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி. சித்தார்த்தா. இவர் கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளராவார். இவர் திங்கள்கிழமை தனது காரில் மங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது உல்லாலில் உள்ள நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் வாகனத்தை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து காரை விட்டு இறங்கிய பின்னர் அவர் யாருடனோ போனில் பேசியுள்ளார். பின்னர் மாலை 6.30 மணி வரை அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.

    மைன்ட் ட்ரீ நிறுவன பங்குகளை விற்பனை செய்ததில் மிரட்டப்பட்டாரா 'காபிடே' சித்தார்த்தா? மைன்ட் ட்ரீ நிறுவன பங்குகளை விற்பனை செய்ததில் மிரட்டப்பட்டாரா 'காபிடே' சித்தார்த்தா?

    சந்தேகம்

    சந்தேகம்

    அதன் பின்னர் அவர் நீண்ட நேரமாகியும் கார் இருக்கும் இடத்துக்கு திரும்பாததால் டிரைவர் ஆற்றுப் பாலத்துக்கு சென்று தேடியுள்ளார். அப்போது அவர் அங்கு இல்லாததை அடுத்து டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். போனில் யாருடனோ டென்ஷனாக பேசிய சித்தார்த்தா நடக்க வேண்டும் என சொல்லிய போது டிரைவருக்கு சந்தேகம் ஏற்படாதது ஏன் என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன.

    லாபம்

    லாபம்

    அதாவது காபி எஸ்டேட் உரிமையாளரின் மகனான சித்தார்த்தா, மெல்ல மெல்ல சிறு சிறு தொழில்களை தொடங்கி முன்னுக்கு வந்துள்ளார். அவர் 1996-ஆம் ஆண்டு காபி டே நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை தொடங்கும் அளவுக்கு நன்கு லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

    பின்பற்றுதல்

    பின்பற்றுதல்

    சித்தார்த்தா பெரும்பாலும் மனக் கவலை ஏதும் இருந்தால் தனது காபி எஸ்டேட்டில் நீண்ட தூரம் நடந்து செல்வாராம். மனக் கவலையின் போது மட்டுமல்ல ஏதேனும் முக்கிய முடிவுகளை எடுக்க யோசனை செய்யவும் அவர் இதே முறையைதான் பின்பற்றுவாராம்.

    ஜீரணிக்க முடியவில்லை

    ஜீரணிக்க முடியவில்லை

    அதனால்தான் ஆற்றுப்பாலத்தில் தன்னை இறக்கிவிடுமாறு சித்தார்த்தா கூறிய போது டிரைவருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. ரிலாக்ஸுக்காக வாக்கிங் சென்ற சித்தார்த்தாவின் பயணம் இறுதி நடையாக மாறிய சோகத்தை அவரது நிறுவன ஊழியர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    English summary
    Siddhartha is known to take long walks in coffee plantations to relax his mind. Likewise his driver thought he is walking in river bridge to calm his mind.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X