பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த காலத்தில் இப்படியா?.. 33 மாதங்கள்.. 70 வயது தாயை பைக்கில் ஆன்மீக சுற்றுலா அழைத்து சென்ற மகன்

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டும் என்ற தாயின் ஆசையை மகன் ஒருவர் நிறைவேற்றியுள்ளார். அவர்கள் 33 மாதங்களுக்கு பின்னர் மைசூருவுக்கு வந்தனர். தாயின் அடிப்படை தேவைகளைகூட பூர்த்தி செய்யாத மகன்கள் இந்த பூமியில் வாழும் நிலையில் தாயின் ஆசையை நிறைவேற்றிய இந்த மகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கர்நாடகா மாநிலம், மைசூரு நகரை ஒட்டிய போகாதி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது தாய் ரத்னம்மா (70). கிருஷ்ணகுமார் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு.. எப்படி பெறுவது.. மின்சார வாரியம் சூப்பர் அறிவிப்பு50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு.. எப்படி பெறுவது.. மின்சார வாரியம் சூப்பர் அறிவிப்பு

கணவன் இறப்பு

கணவன் இறப்பு

கிருஷ்ணகுமாரின் தந்தை இறந்துவிட்டார். கணவன் இறந்துவிட்டதால் தனிமையை உணர்வதாக ரத்னம்மா, மகன் கிருஷ்ணகுமாரிடம் வருந்தியுள்ளார். அப்போது தான் ஹாசன் மாவட்டம் பேளூர் உள்ள ஒலேபீடு கோயிலுக்கு செல்லவில்லை என்றும் வெளிமாநிலங்களுக்கு இதுவரை செல்லவில்லை என்றும் ரத்தனம்மா தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

பயணம்

பயணம்

இதை கேட்ட கிருஷ்ணகுமார் தனது தாயை இந்தியா முழுவதும் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டார். அதன்படி கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி கிருஷ்ணகுமார் தனது தாயை ஆன்மீக சுற்றுலா அழைத்து சென்றார். அதாவது தனது தந்தை 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ஸ்கூட்டரில் தாயை அமர வைத்து இந்த பயணத்தை மேற்கொண்டனர்.

பல மாநிலங்கள்

பல மாநிலங்கள்

முதலில் பேளூர் ஓலேபீடு கோயிலுக்குச் சென்ற அவர்கள் ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா, புதுவை, தமிழகம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டனர். அங்குள்ள இந்து கோவில்கள், மசூதிகள், பேராலயங்களுக்கு அவர்கள் சென்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார்கள்.

மைசூரு

மைசூரு

இந்த ஆன்மீக பயணத்தை முடித்த தாயும் மகனும் நேற்று மைசூருவுக்கு வந்தனர். 2 ஆண்டுகள், 9 மாதங்கள் இந்த பயணத்தை மேற்கொண்ட இவர்கள் தற்போது நிறைவு செய்துள்ளனர். சுமார் 56 ஆயிரம் கிலோ மீட்டர் அவர்கள் ஸ்கூட்டரிலேயே பயணம் செய்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் கோயில்கள் திறக்காவிட்டாலும் ஆலயங்களை காண்பித்து தனது தாயின் ஆசையை பூர்த்தி செய்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

English summary
Son in Bangalore fulfils mother's wish for spiritual tour of 56 thousand kilometers by scooter itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X