பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதோ என் ராஜினாமா கடிதம்.. பாக்கெட்டிலிருந்து எடியூரப்பாவிடம் எடுத்து காட்டிய சபாநாயகர்

Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது கர்நாடக அரசு

    பெங்களூர்: சட்டசபையை, சரியாக நடத்த முடியாவிட்டால், ராஜினாமா செய்து விடலாம் என்று ராஜினாமா கடிதத்தை சட்டைப்பையில் வைத்து இருக்கிறேன் என்று எடுத்துக் காட்டினார் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார்.

    முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது விவாதம் முடிவடைந்து, அதற்கு முதல்வர் பதில் அளித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ரமேஷ்குமார், அதிருப்தி எம்எல்ஏ விஸ்வநாத் எனது நடவடிக்கை பற்றி குற்றம்சாட்டி பேசியுள்ளார். ஆனால் அவர் என்னை மாதிரி தூய்மையாக வாழ வேண்டும் என்றால் நூறு ஜென்மம் பிறப்பு எடுக்க வேண்டும்.

    Speaker Ramesh Kumar says I have already prepared a resignation letter

    ஒருவேளை இன்று சட்டசபையை சரியாக நடத்த முடியாமல் போனாலோ, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாமல் போனாலோ, எனது பதவியை ராஜினாமா செய்து விடும் முடிவில் தான் நான் வந்துள்ளேன். எனது சட்டைப் பையில் ராஜினாமா கடிதம் வைத்துள்ளேன். இவ்வாறு கூறிய ரமேஷ் குமார், தனது சட்டைப் பையில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவை காவலர் மூலமாக எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பாவிடம் கொடுத்தனுப்பினார்.

    அதை புன்முறுவலுடன் வாசித்துப் பார்த்தார் எடியூரப்பா. தனது நேர்மை, மீது யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார் சபாநாயகர் ரமேஷ்குமார். அதன் ஒரு பகுதியாக தனது சட்டைப்பையில் இருந்து ராஜினாமா கடிதத்தை எடுத்துக் காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    English summary
    Speaker Ramesh Kumar says I have already prepared a resignation letter for whatever time I feel my self respect is being hurt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X