பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூர்-நாகர்கோவில் இடையே.. மதுரை வழியே துவங்கியது சிறப்பு ரயில் சேவை.. தினமும் இயங்கும்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர்-நாகர்கோவில் இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    மதுரை: நாகர்கோவில் டூ பெங்களூரு…மதுரை வழியாக மேலும் ஒரு ஸ்பெஷல் ட்ரெய்ன்!

    நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக பெங்களூருக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்களில் இதுவும் இணைந்தது.

    இந்த நிலையில், ஜனவரி 31ம் தேதி முதல் சிறப்பு ரயில் என்ற பெயரில், இந்த ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது.

    Special train will be operated between Bangalore and Nagercoil via Madurai

    பெங்களூரில் இருந்து இந்த ரயில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் நாகர்கோவிலுக்கு இயக்கப்பட உள்ளது. நாகர்கோவிலில் இருந்து வருகிற 1ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.

    ரயில் எண்.07235 பெங்களூருவில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.55 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. காலை 6.10 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடையும். காலை 8.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில், வருகிற 1ம் தேதி இந்த ரயில் எண்.07236, நாகர்கோவிலில் இருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படுகிறது. இரவு 9 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 11.50 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடையும். பிறகு, மறுநாள் காலை 9.20 மணிக்கு பெங்களூரர் ரயில் நிலையம் சென்றடைகிறது.

    இந்த ரயில், பெங்களூர் கண்டோன்மெண்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 பார்சல் பெட்டிகளுடன் இணைந்த 2ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 3 மூன்றடுக்கு ஏசி கோச், ஒரு 2 அடுக்கு ஏசி கோச், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கோச்கள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த தினசரி ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Southern Railway has announced a special train between Bangalore and Nagercoil via Madurai. Train No. 07235 will leave Bangalore at 5 pm tomorrow and reach Madurai at 2.55 am the next day. The train will reach Nellai railway station at 6.10 am. Arrive Nagercoil at 8.20 am. In the return direction, Train No. 07236 will leave Nagercoil at 7.10 pm on January 1. Arrive at Nellai railway station at 9pm. The train will reach Madurai at 11.50 am. The train will reach Bangalore Railway Station at 9.20 am the next day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X