பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எஸ்ஆர் பொம்மை vs மத்திய அரசு .. வரலாற்று தீர்ப்பு.. மாநில அரசுகளை காப்பாற்றிய பசவராஜின் தந்தை

Google Oneindia Tamil News

பெங்களூரு : கர்நாடகாவின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பசவராஜ் பொம்மையின் தந்தை தான் எஸ்.ஆர்.பொம்மை. இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதல்வராக 1989களில் இருந்தார் . இவரது ஆட்சியை மத்தியில் ஆட்சியில் இருந்து ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு கலைத்தது. இதை எதிர்த்து எஸ்ஆர் பொம்மை தொடர்ந்த வழக்குதான் இன்று வரை மாநில அரசுகளை பாதுகாக்கிறது.

Recommended Video

    Who Is Basavaraj Bommai | Karnataka new CM

    எஸ்ஆர் பொம்மை vs மத்திய அரசு என்று அழைக்கப்படும் இந்த வழக்கில் முக்கியமான விஷயங்களை இப்போது பார்ப்போம். எஸ்.ஆர்.பொம்மை வெர்சஸ் யூனியன் ஆப் இந்தியா என்பது மார்ச் 1994 ம் ஆண்டில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பு வழங்கிய வழக்கு ஆகும்.

    யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை சட்டப்பேரையில் பெருன்பான்பையின் மூலம் தான் தீர்க்கப்பட வேண்டும் என்ற வரலாற்று தீர்ப்பை 9 நீபதிகள் அமர்வு வழங்கியது. குல்தீப் சிங், பி. பி. சாவந்த், கட்டிகிதலா ராமசாமி, எஸ். சி. அகர்வால், யோகேஸ்வர் தயால், பி. பி. ஜீவன் ரெட்டி, எஸ். ஆர். பாண்டியன், A. M. அஹ்மதி, ஜே.எஸ். வர்மா ஆகிய 9 நீதிபதிகள் அமர்வு வழங்கியது.

    புதிய கர்நாடகா முதல்வர்.. யார் இந்த பசவராஜ் பொம்மை.. பின்னணி என்ன? புதிய கர்நாடகா முதல்வர்.. யார் இந்த பசவராஜ் பொம்மை.. பின்னணி என்ன?

    எஸ்ஆர் பொம்மை

    எஸ்ஆர் பொம்மை

    தீர்ப்பை பற்றி பார்க்கும் முன்பு இந்த வழக்கின் முக்கியத்துவம் என்ன என்பதையும் சொல்ல வேண்டும். 1985ம் ஆண்டில், கர்நாடகாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக ராமகிருஷ்ண ஹெக்டே பதவியேற்றார். 1988ம் ஆண்டில் ஹெக்டே முதல்வர் பதிவியில் இருந்து விலகியனார் அப்போது எஸ்.ஆர்.பொம்மை முதல்வராக பதவியேற்றார். 1988ம் ஆண்டிலேயே லோக் தளத்துடன் இணைத்து ஜனதா கட்சி, ஜனதா தளமாக மாறியது. இதனால், புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பொம்மை அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.

    நம்பிக்கை இல்லை

    நம்பிக்கை இல்லை

    அப்போது ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர் ​​மோலகேரி அதிருப்திஅடைந்து ஆளுநரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் 19 சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பமும் இருந்தது. பொம்மை அரசின் மீது நம்பிக்கை இல்லை, அதனால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறோம் என்று மனுவில் கூறினார். அதாவது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் எப்படி ஆளுரை சந்தித்து நம்பிக்கை இல்லை என்று சொன்னார்களோ அதுபோல கூறினார்கள். அப்போது மத்தியத்தில் ஆட்சி செய்து வந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் அரசாங்கம் 356 வது பிரிவின் மூலம், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி கர்நாடக மாநில அரசை கலைத்தது.

    நாகலாந்து

    நாகலாந்து

    இதை எதிர்த்து எஸ்.ஆர்.பொம்மை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குக்கு மத்தியில். 1991ம் ஆண்டு அரசியலமைப்பற்ற மேகாலயா அரசை கலைத்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது காங்கிரஸ் அரசு. முன்னதாக 1988ம் ஆண்டில், நாகாலாந்து அரசு கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

    கலைத்த காங்கிரஸ் அரசு

    கலைத்த காங்கிரஸ் அரசு

    1991ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, பாஜக ஆண்டு வந்த உத்தரபிரதேச மாநிலம்,, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆட்சியை கலைத்தது. இதனால் எஸ்.ஆர். பொம்மை வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தா வழக்காக பார்க்கப்பட்டது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட பொம்மை வழக்கு அமர்வு , பிரிவு 356-ஐ பயன்படுத்துவதற்கான அரசியலமைப்பு வரம்புகளைப் விவரமாக ஆராய்ந்து தீர்ப்பளித்தது.

    அரசியலைமைப்பு

    அரசியலைமைப்பு

    தீர்ப்புகளில் எ முக்கிய விஷயம், ஒரு மாநில அரசாங்கத்தை கலைக்க மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்த நீதிமன்றம் பல வழிகாட்டுதல்களை வகுத்தது. மத்திய அரசுvs மாநில அரசு என்ற கூட்டாட்சி முறை தான் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை தத்துவம் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

    மாநில சட்டசபை

    மாநில சட்டசபை

    இரண்டாவது முக்கியமான விஷயம். சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு முறையில் மட்டும் தான் மாநில அரசின் ஆதரவைத் தீர்மானிக்க முடியும் என்ற சட்ட நெறியை உச்ச நீதிமன்றம் வகுத்தது. அதேபோல் 356 பிரிவின் கீழ் வெளியிடப்படும் ஜனாதிபதி பிரகடனம் நீதிதுறை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் வரலாற்று மிக்க தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்.

    மத அரசியலுக்கு தடை

    மத அரசியலுக்கு தடை

    மூன்றாவது முக்கியமான விஷயம், ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரங்கள் முழுமையாக செயல் இழக்கும் போது மட்டும்தான், அம்மாநில அரசாங்கத்தை கலைக்க ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற அதிகாரங்கள் இருக்கும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்தது. இந்த தீர்ப்பு தான் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை யும் உறுதி செய்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வுகளை சுட்டிக்காட்டி, அதிகாரத்தைப் பெறுவதற்கு ஒரு கட்சி மதத்தை நாட முடியாது, மத அரசியலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், ஜனாதிபதி 356 சட்டப்பிரிவை பயன்படுத்த தடையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    மாநில அரசுகளுக்கு பாதுகாப்பு

    மாநில அரசுகளுக்கு பாதுகாப்பு

    தீர்ப்பால் ஏற்பட்ட மாற்றங்கள், அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, 356 வது பிரிவின் கீழ் ஜனாதிபதி ஆட்சி 100 க்கும் மேற்பட்ட முறை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஆனால் எஸ்.ஆர் பொம்மை தீர்ப்புக்கு பின்னர் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வருவது குறையத் தொடங்கியது. ஆட்சி கலைப்பும் பெரிய அளவில் குறைந்துவிட்டது.

    English summary
    S. R. Bommai v. Union of India ([1994] 2 SCR 644 : AIR 1994 SC 1918 : (1994)3 SCC1) was a landmark judgment of the Supreme Court of India, where the Court discussed at length provisions of Article 356 of the Constitution of India and related issues. This case had huge impact on Centre-State Relations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X