பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைமறைவாக இருந்த இலங்கை தாதா ஜெமினி பொன்சேகா.. பெங்களூரில் கைது.. தமிழக போலீஸ் அதிரடி

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூருவில் தலைமறைவாக இருந்த இலங்கை டான் ஜெமினி பொன்சேகாவை தமிழக கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் பிரபல டான் சுனில் ஜெமினி பொன்சேகா. இவர் அந்நாட்டு அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2003-ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தியதாக தமிழக போலீஸார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Srilankan Don Gemini Ponseka arrested

கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த பொன்சேகா, தனது பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றி இந்திய குடிமகனுக்கான ஆவணங்களையும் போலி பாஸ்போர்ட்டையும் பெற்றுள்ளார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஆண்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனது அடையாளத்தை மாற்றி தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார். சென்னையில் கடந்த 6 மாத காலத்திற்கு மேல் விருகம்பாக்கம், வளசரவாக்கம், ஆவடி, கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் இலவச கல்வி முதல் செல்போன் வரை எகிறும் எதிர்பார்ப்பு திமுக தேர்தல் அறிக்கையில் இலவச கல்வி முதல் செல்போன் வரை எகிறும் எதிர்பார்ப்பு

இதனிடையே தமிழகத்தில் நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த பொன்சேகா, தமிழக போலீஸார் தேடுவதை அறிந்து பெங்களூருக்கு தப்பி சென்றார். இதையடுத்து தலைமறைவாக இருந்த பொன்சேகாவை தமிழக க்யூ பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளார். இதையடுத்து அவரை நாளை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

English summary
Srilankan Don Gemini Ponseka arrested by Tamilnadu Q branch police in Bengaluru.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X