பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜிம்முக்கு போகாமல் கும்முனு இருக்கும் ஸ்ரீனிவாச கவுடா.. ரகசியமெல்லாம் இல்ல.. இது ரொம்ப சிம்பிள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    உசைன் போல்ட் சாதனையை உடைத்த கிராமத்து மனிதர் | Karnataka Villlager beat Usain Bolt’s world record

    பெங்களூர்: ஜிம்முக்கு போகவில்லை, புரோட்டீன் எடுத்துக் கொள்ளவில்லை, டயட் திட்டமேதும் இல்லை. ஆனால் உண்மையான சிக்ஸ் பேக்குடன் அசத்துகிறார் பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாச கவுடா.

    கர்நாடக மாநிலத்தில் மங்களூர், உடுப்பி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது கம்பலா ரேஸ். இது ஆண்டுதோறும் ஜனவரி- பிப்ரவரி மாதத்தில் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை போல் பாரம்பரிய மிக்கது. இந்த கம்பலா போட்டி என்பது சேறும் சகதியும் நிறைந்த 100 மீட்டர் ஓடுகளத்தை எருமை மாடுகளை கட்டிக் கொண்டு வீரர்கள் இரு புறங்களில் இருந்தும் ஓடுவர்.

    கோலாகலம்

    கோலாகலம்

    இதில் மின்னல் வேகத்தில் இலக்கை அடையும் நபர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். இது சாதாரண பாரம்பரிய விளையாட்டு என்றாலும் இதன் மூலம் உலக போட்டிகளை நெருங்கும் அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நிலையில் இந்த ஆண்டும் கம்பலா ரேஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    தொலைவு

    தொலைவு

    இந்த போட்டியில் மங்களூரு மட்பித்ரியைச் சேர்ந்த சீனிவாச கவுடா 100 மீட்டர் ஓடுதளத்தை வெறும் 9 நிமிடங்கள் 55 நொடிகளில் கடந்து வெற்றி பெற்றார். ஒலிம்பிக்கில் தடகள வீரர் உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவர் 100 மீட்டர் தொலைவை வெறும் 9 நிமிடங்கள் 58 விநாடிகளில் கடந்தார்.

    வினாடிகள்

    உலகச் சாதனையான அவரது சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. இந்த நிலையில் சீனிவாச கவுடா அவரது சாதனையை முறியடித்துள்ளார். 9.55 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்துள்ளார். இது வைரலானது. இதுகுறித்து சீனிவாச கவுடா கூறுகையில் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி நடந்த கம்பலா போட்டியில் 142.5 மீட்டர் தூரத்தை வெறும் 13.62 வினாடிகளில் கடந்தேன்.

    6 பேக்

    என்னை உசேன் போல்ட்டுடன் ஒப்பிடுகின்றனர். அவர் உலக சாம்பியன். நான் வெறும் சேறும் சகதியுமாக உள்ள நெல் வயலில் ஓடுகிறேன் என தெரிவித்தார். இந்த நிலையில் சீனிவாச கவுடா 6 பேக் வைத்துள்ளது வைரலாகியுள்ளது. இதன் ரகசியம் குறித்து அவரிடம் கேட்டபோது அது ரொம்ப சிம்பிள். 6 பேக் உடலமைப்பிற்காக எந்த வித ஜிம்மிற்கும் செல்லவில்லை. புரத உணவுகளை உண்ணவில்லை. டயட் சார்ட்டெல்லாம் போடவில்லை என்கிறார்.

    English summary
    Srinivasa Gowda has 6 pack with No Gym, No Protein, No Diet plan. This is real Six Pack fitness!
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X