பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிட் அடிப்பதை தடுக்கலாம்யா... அதுக்காக இப்படியா? இதெல்லாம் ரொம்ப ஓவரப்பு.. கர்நாடகாவில் ஒரு கூத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    பிட் அடிப்பதை தடுக்கலாம்... அதுக்காக இப்படியா? கர்நாடகாவில் கூத்து

    பெங்களூரு: கர்நாடகாவில் மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் செயல்படுத்திய 'அடேங்கப்பா யுக்தி'தான் சமூக வலைதளங்களில் வைரல்.

    கர்நாடகாவின் ஹவேரி மாவட்டம் தனியார் கல்லூரியில் வேதியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு அண்மையில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிந்த உடன் கல்லூரியைச் சேர்ந்த சதீஷ் ஹெரூர் என்ற மாணவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படத்தை 'எங்கள் கல்லூரியின் மிட்-டேர்ம் தேர்வு இப்படித்தான் நடைபெற்றது' என்ற வாசகத்துடன் பதிவிட்டிருந்தார்.

    Students made to wear cardboard boxes for exam in Karnataka College

    இதை பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் மாணவர், மாணவியர் அனைவர் தலையிலும் அட்டைப்பெட்டி ஒன்று கவிழ்க்கப்பட்ட நிலையில்தான் தேர்வு எழுதினர்.

    மறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலிமறந்து போச்சா மருத்துவரே... ராமதாஸை சீண்டும் முரசொலி

    இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் கூறுகையில், கடந்த ஆண்டு தேர்வின் போது பல மாணவர்கள் பேராசிரியர்களை ஏமாற்றிவிட்டு காப்பி அடித்தனர்; பல முறை எச்சரித்தும் அவர்கள் அதை கைவிடவில்லை. அதனால் இந்த புதிய ஐடியாவை நிர்வாகம் அறிமுகப்படுத்தியது என்கின்றனர்.

    இது தொடர்பாக அக்கல்லூரிக்கு கர்நாடகா மாநில அரசு எழுத்துப்பூர்வமான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதெல்லாம்....!

    English summary
    A controversy has erupted over the Karnataka COllege first-year students of were with cardboard boxes for exam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X