பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெருங்கும் கர்நாடக தேர்தல்.. பரிதாப நிலையில் பாஜக! சீக்ரெட் ரிப்போர்டால் தாமரை தலைமை அதிர்ச்சி

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பலத்த பின்னடைவை சந்திக்கும் என தனியார் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் ஆய்வு முடிவால் அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்திருக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்து முதல்நாளே எடியூரப்பா அரசை கவிழ்த்து ஆட்சியை தக்க வைத்தது காங்கிரஸ்.

ஆனால், அடுத்த ஆண்டே 2019 ல் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கவர்ந்த பாஜக அவர்களை பதவி விலக செய்தது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிகளை கவிழ்க்க ஒரே பார்முலா!3 ஆண்டுகளில் 4 மாநில அரசுகளை கவிழ்த்த பாஜக! எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிகளை கவிழ்க்க ஒரே பார்முலா!3 ஆண்டுகளில் 4 மாநில அரசுகளை கவிழ்த்த பாஜக!

 ஆட்சியை பிடித்த பாஜக

ஆட்சியை பிடித்த பாஜக

இதன் மூலம் ஜேடியு - காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது. எடியூரப்பா தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த ஆண்டு எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து பசவராத் பொம்மை மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்த சூழலில் வரும் 2023 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

அமைதியிழந்த கர்நாடகா

அமைதியிழந்த கர்நாடகா

பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்தே, அங்கு மத ரீதியிலான வன்முறைகள் தலைதூக்கியுள்ளன. குறிப்பாத இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே ஹிஜாப் பிரச்சனை, ஹலால் பிரச்சனை, ஒலிப்பெருக்கி சர்ச்சை, இஸ்லாமிய வியாபாரிகள் புறக்கணிப்பு என அடுத்தடுத்து கிளம்பிய பிரச்சனைகளால் அம்மாநிலமே அமைதியிழந்து காணப்படுகிறது. இந்த நிலையில் 2023 தேர்தல் நெருங்கியுள்ளதை தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் அடிக்கடி கர்நாடகத்தை எடிப்பார்த்த வண்ணம் உள்ளனர்.

நரேந்திர மோடி பயணாம்

நரேந்திர மோடி பயணாம்

அண்மையில்கூட பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் திட்டங்களை தொடங்கி வைத்து அங்கேயே யோகா தினத்தையும் கொண்டாடினார். இதற்கிடையே 2023 தேர்தலில் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை அறிய தனியார் நிறுவனம் மூலம் பாஜக ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவை பார்த்த பாஜக தலைமை கடும் அதிர்ச்சியில் உள்ளதாம். அதாவது 70 முதல் 80 இடங்களை மட்டுமே அக்கட்சி வெல்லும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Recommended Video

    Maharashtra முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக Uddhav Thackeray அறிவிப்பு *Politics
     அடிவாங்கப்போகும் பாஜக

    அடிவாங்கப்போகும் பாஜக

    கடந்த தேர்தலில் 104 தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மைசூரு, மாண்டியா, ஹாசன், சாம்ராஜ்நகர், துமகூரு, ராம்நகர், கோலார், சித்ரதுர்கா, சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களில் பாஜகவிற்கு குறைவான ஆதரவே கிடைக்கும் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் தனி மெஜாரிட்டியாக வெல்ல 113 இடங்களை கைப்பற்றும் கட்சி தனிப்பெரும்பான்மை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Report says BJP will lose in 2023 Karnakata Assembly elections by getting only 70 - 80 seats: கர்நாடகாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பலத்த பின்னடைவை சந்திக்கும் என தனியார் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் ஆய்வு முடிவால் அக்கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X