பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஓரிரு நாளில் விடுதலை ஆகிறார் சுதாகரன்

Google Oneindia Tamil News

பெங்களூரு: சொத்து வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி, சுதாகரன் மனு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு சுதாகரன் எந்நேரத்திலும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரூ சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து பல்வேறு மேல்முறையீட்டு மனுக்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலா வெளியே வரப் போகும் சசிகலா வெளியே வரப் போகும் "டைம்" இதுதானாம்.. திடீர்னு கிளம்பி பரவி வரும் புதிய தகவல்!

சசிகலா விடுதலை

சசிகலா விடுதலை

கடந்த நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் . சசிகலா , இளவரசி, சுதாகரன் ஆகியோர் வரும் ஜனவரி 27ம் தேதி விடுதலையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதமே உள்ளதால் அரசியல் வட்டாரததில் பரபரப்பு நிலவுகிறது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்

இந்த சூழலில் சசிகலா, இளவரசிக்கு முன்பாகவே சுதாகரன் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஏற்கனவே சுதாகரன் 92 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். இதை சுட்டிக்காட்டி சுதாகரன் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

எந்த நேரமும் சுதாகரன் விடுதலை

எந்த நேரமும் சுதாகரன் விடுதலை

இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உத்தரவிட்டால் எந்த நேரமும் சுதாகரன் விடுதலை செய்யப்படுவார் என்ற பரபரப்பு நிலவுகிறது.

இரவில் விடுதலை

இரவில் விடுதலை

இதனிடையே சசிகலா விடுதலை நாளான அன்று, பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து கர்நாடக உளவுத்துறை பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில் அவரது பாதுகாப்பை கருதி மற்ற கைதிகளை போல் இரவு 7 மணிக்கு இல்லாமல், இரவு 9.30 மணிக்கு விடுதலை செய்யலாம் என்று கூறியுள்ளது.

English summary
The Bangalore Special Court has accepted Sudhakaran's petition seeking his early release in the property case. Sudhakaran has filed a petition pointing out that he has already been in jail for 92 days. Sudhakaran is likely to be released at any time after the court order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X