பேசிட்டு இருக்கும்போதே.. தலித் தலைவர் வாய்க்குள் இருந்த சாப்பாட்டை எடுத்து சாப்பிட்ட எம்எல்ஏ.. அடடா
பெங்களூர்: தலித் தலைவர் வாயில் இருந்து, சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டுள்ளார் எம்எல்ஏ ஒருவர்.. இந்த வீடியோதான் இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.
கர்நாடகாவின் பெங்களூர், சாம்ராஜ்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜமீர் அஹமது கான்.. 4 வது முறையாக எம்எல்ஏவாகி இருப்பவர்..
3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!
முன்னாள் உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

ஸ்வீட்கள்
இவர் அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய, ஜமீர் அகமது கான், மதம் மற்றும் சாதியை வைத்து மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று வேதனை தெரிவித்தார்... மேடையில் பேசிக் கொண்டு இருக்கும்போதே, அங்கு டேபிளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஸ்வீட்களை ஜமீர்அகமது கான் பார்த்தார்... டேபிள் அருகில் வந்து, கொஞ்சமாக ஸ்வீட் எடுத்து, அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த தலித் சாமியாருக்கு ஊட்டி விட்டார்...

ஆடிப்போன சாமியார்
சாமியாரும் ஆவென வாயை காட்டி அந்த ஸ்வீட்டை சாப்பிட போனார்.. ஆனால், அடுத்த செகண்டே சாமியாரை ஜமீர்அகமது கான் தடுத்து நிறுத்தினார்.. தான் ஊட்டிவிட்டது போலவே, தனக்கும் ஸ்வீட்டை ஊட்டிவிட வேண்டும் என்று கேட்டார். உடனே சாமியாரும், கையில் இருந்த ஸ்வீட்டை வாயில் போட்டுக் கொண்டு, பக்கத்தில் டேபிள் மீதிருந்த ஸ்வீட்டை எடுக்க போனார்.. அப்போது மறுபடியும் அவரை தடுத்து நிறுத்திய ஜமீர்அகமது கான், சாமியார் சாப்பிட்டு கொண்டிருந்த ஸ்வீட்டை, அவர் வாயில் இருந்து எடுத்து தனக்கு ஊட்டிவிடுமாறு கேட்டார்..

ஸ்வீட்
இதைக் கேட்டதும் சாமியார் ஆடிப்போய் விட்டார்.. பிறகு சமாளித்து கொண்டே, வேறு வழியில்லாமல் தன் வாயில் இருந்த ஸ்வீட்டை எடுத்து அவருக்கு ஊட்டினார்.. இவர்கள் 2 பேரின் செயல்களையும் பார்த்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அதிர்ந்து போனாலும், இறுதியில் கை தட்டி தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.. தலித் தலைவர் இனிப்பை ஊட்டி விட முற்பட்ட போது, அவரது வாயில் உள்ள இனிப்பை எடுத்து ஊட்டி விட சொல்லி எம்எல்ஏ சாப்பிட்ட இந்த நிகழ்வுதான் வீடியோவாக வெளிவந்துள்ளது..

பயங்கரவாதம்
சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக இவ்வாறு செய்ததாக கூறிய எம்எல்ஏ, சிலர் பயங்கரவாதத்தை வைத்து சமுதாயத்தினருக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். ஒற்றுமை இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ வெளியாகியதையடுத்து, பலரும் அதற்கு திரண்டு கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.