பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கும்மிருட்டு.. நெருப்பு வளையம்.. வெளியே வராத மக்கள்.. பெங்களூரில் மாஸ் காட்டிய சூரிய கிரகணம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் காரணமாக பெங்களூரில் கடுமையான இருள் சூழ்ந்திருந்தது.

பெங்களூரிலும் சூரிய கிரகணம் இன்று காலை 8.6 மணிக்கு தொடங்கி 11.11 மணிக்கு முடிவடையும் என்று விஞ்ஞானிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது.

Suriya Kiraganam: Dark in Bangalore at this time of the day due to Solar Eclipse

வெறும் கண்களால் இதைப் பார்க்கக்கூடாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து இருந்ததால் பெங்களூரில் உள்ள ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது! தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது!

அதே போன்று, புகழ்பெற்ற லால்பாக் பூங்காவில் கர்நாடக ஞான விஞ்ஞான சமிதி என்ற அமைப்பு சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தது.

இதையடுத்து இந்த இந்த பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர். அதே நேரம் சூரிய கிரகணம் ஆரம்பித்தது முதல் பெங்களூர் நகரத்தில் இருள் சூழ்ந்தது. மழை பெய்யும் சூழ்நிலை போல காணப்பட்டது. இருப்பினும் பல்வேறு பகுதிகளிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பொதுமக்களால் பார்க்க முடிந்துள்ளது.

சூரியனின் ஒளி சந்திரனால் மறைக்கப்பட்டது, பனிமூட்டம் மற்றும் மேக கூட்டம் போன்றவை பெங்களூர் இருள் சூழ்ந்து இருந்த நிலைமைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கர்நாடக மக்கள் சூரிய கிரகணத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் எதுவும் சாப்பிடுவதில்லை, வீட்டை விட்டு வெளியே போவதில்லை. ஏற்கனவே வீட்டில் சமைத்த உணவு பொருட்களை தவிர்த்துவிட்டு சூரிய கிரகணம் முடிந்ததும் புதிதாக சமைத்துதான் சாப்பிடுகிறார்கள்.

அதேநேரம், பெங்களூரில் வசிக்கும் பிற மாநில மக்கள், சூரியகிரகணம் ஒரு வானியல் நிகழ்வு என்ற அளவில், பெரிதாக முக்கியத்துவம் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Suddenly so dark in Bengaluru at this time of the day due to Solar Eclipse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X