"SORRY".. நிஜமாகவே தெரியல.. "ஸாரி.. ஸாரி".. பெங்களூர் ரோடெல்லாம் ஒரே பரபரப்பு.. என்ன காரணம்?
பெங்களூரு: ஸாரி.. நிஜமாகவே இப்படி "ஸாரி" சொன்னவர் யார் என்று தெரியவில்லை.. இந்த விநோத ஸாரிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பெங்களூருவில் காமக்ஷிபல்யா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாந்திதாமா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியின் நுழைவாயிலில் ஸாரி என்ற எழுத்து எழுதப்பட்டுள்ளது.. அங்குள்ள சுவர்கள் மற்றும் அதை சுற்றியுள்ள ரோடெல்லாம் "ஸாரி" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது...
ஹிஜாபை அடுத்து ஹலால் இறைச்சிக்கு குறி... பெங்களூரு மாநகராட்சிக்கு கர்நாடக அரசு பரபர உத்தரவு

பெயிண்ட்
ரெட் கலர் பெயிண்ட்டில் கொட்டை கொட்டை எழுத்தக்களில் "ஸாரி" என்று எழுதப்பட்டுள்ளது. வழக்கம்போல்,
பள்ளிக்கு வந்த மாணவர்களும், ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் இந்த "ஸாரி"யை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்... இப்படியெல்லாம் யார் எழுதியது என்று தெரியவில்லை.. அந்த கையெழுத்துக்கள் அனைத்தும் ஒரே ஒரு நபர் எழுதியதுபோலவே காணப்பட்டது.

நள்ளிரவில் மர்மநபர்கள்
உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்... போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. ஆனால், எந்த க்ளூவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதால், வழக்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. ஆனால், டெலிவரி பாய்ஸ் வேடத்தில் வந்த மர்மநபர்கள் நள்ளிரவில் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் மட்டும் சந்தேகம் எழுந்துள்ளது... இந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

சஸ்பென்ஸ்
மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்தபோது அடையாளம் தெரியாத 2 பேர் பைக்கில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்... அவர்களை கண்டுபிடித்த பின்னரே எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்து தெரியவரும் என்கிறார்கள்.

ரகசியம்
ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டு, சம்பந்தப்பட்டவர் நம்மை மன்னிக்காத பட்சத்தில், இப்படியெல்லாம் ஸாரி கேட்டு கெஞ்சுவோம்.. அவர்கள் சமாதானம் ஆகும்வரை ஸாரி கேட்டுக் கொண்டிருப்போம்.. அதற்காக சில முயற்சிகளை ஒருசிலர் மேற்கொண்டு வந்தாலும், அவர்கள் கோபம் தணியாது.. அப்படிப்பட்டவர்கள் யாராவது இந்த "ஸாரி"க்கு பின்னால் இருக்கக்கூடும் என்றே தெரிகிறது.. அந்த அழுத்தக்காரர்களும் யார் என்று தெரியவில்லை.

"ஸாரி"
அப்படிப்பட்டவர்களை கவர்வதற்காகவே இப்படி ஸாரி என்று எழுதப்பட்டிருக்குமா என்றும் புரியவில்லை.. இதெல்லாம் சினிமாவில்தான் நாம் நாம் பார்த்து கொண்டிருந்தோம்.. இப்போது கண்ணெதிரேயே, அதுவும் படிக்கிற பிள்ளைகளே இப்படி எழுதி வைத்திருப்பது ஆச்சரியத்தை தந்துள்ளது.. இணையத்தில் இந்த ஸாரி வைரலாகி கொண்டிருந்தாலும், இவ்வளவு "ஸாரி" கேட்டும் கோபம் தணியாத அந்த மர்மநபர், ஸாரி அந்த அழுத்தக்காரர் யாராக இருக்கும்?!