பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எவ்வளவு அழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: நிலாவினை முதல் முறையாக புகைப்படம் எடுத்து சந்திரயான் 2 விண்கலம் அனுப்பி உள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ரூ.978 கோடி செலவில் சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பியது.

Take a look at the first Moon image captured by Chandrayaan2

இந்த விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீகரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது. இந்த சந்திரயான் 2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்டது.

இந்த விண்கலம் செப்டம்பர் 7ம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிரங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பிய பிறகு அதை ஒவ்வொரு சுற்றாக 5 புவி வட்டப்பாதையிலும் நகர்த்தினர். அதன்பின்னர் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கும் அண்மையில் மாற்றினர்.

தற்போது சந்திரயான் 2 விண்கலம் முதல்முறையாக நிலவின் புகைப்படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்த புகைப்படம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 2650 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டரால் நேற்று எடுக்கப்பட்டுள்ளது.

அழகான இந்த புகைப்படத்தில் நிலாவில் மாரே ஓரியண்டல் மற்றும் அப்போலோ ஆகிய எரிமலைகள் இருப்பது அடையாளம் காட்டி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை இஸ்ரோ நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

English summary
Take a look at the first Moon image captured by Chandrayaan2 taken at a height of about 2650 km from Lunar surface on August 21, 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X