பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் முழு ஊரடங்கு: திருப்பி அனுப்பப்படும் தமிழக வாகனங்கள்.. மீறி செல்பவர்கள் மீது தடியடி

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் முழு ஊரடங்கு : தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் அத்திப்பள்ளி சோதனை சாவடியில் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. மீறி செல்பவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சோதனைச் சாவடியில் தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலம் நோக்கி சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அந்த மாநில போலீசார் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

மாட்டுக்கு தண்ணீர் வைப்பது முதல் பால் கறப்பது வரை... சகலமும் கவனிக்கும் கேரள மின்சாரத்துறை அமைச்சர் மாட்டுக்கு தண்ணீர் வைப்பது முதல் பால் கறப்பது வரை... சகலமும் கவனிக்கும் கேரள மின்சாரத்துறை அமைச்சர்

காத்திருக்கும் மக்கள்

காத்திருக்கும் மக்கள்

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் மாநில எல்லைப் பகுதிகளில் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அந்த மாநில போலீசார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாநில எல்லைப்பகுதிகளில் அம்மாநில போலிஸார் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் உள்ளே செல்லாதவாறு தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

போலீசார் தடியடி

போலீசார் தடியடி

அந்த வகையில் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சோதனைச்சாவடியில்
தமிழகத்தில் இருந்து கர்நாடகா நோக்கி சென்ற இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் இலகுரக -வாகனங்களை கர்நாடக போலீசார் தடுத்து மீண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வருகின்றனர். உத்தரவை மதிக்காமல் செல்பவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி திருப்பி அனுப்பினார்கள்.

மருத்துவ சிகிக்சையும் நோ

மருத்துவ சிகிக்சையும் நோ

தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு இ பாஸ் அனுமதிபெற்று செல்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு அங்கு செல்பவர்கள் என அனைவரும் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப் படுவதால் மாநில எல்லைப் பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் காத்திருக்கும் அவல நிலை காணப்படுகிறது.

சரக்கு வாகனங்கள்

சரக்கு வாகனங்கள்

முழு ஊரடங்கால் கடைகள் இல்லாமல் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் வாகன ஓட்டிகளும் அதில் சென்றவர்களும் மாநில எல்லைப் பகுதியில் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் வழக்கம்போல தமிழகத்திலிருந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் கண்டெய்னர்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் கர்நாடகாவுக்கு தொடர்ந்து பயணம் செய்து வருகின்றன.

English summary
Tamilnadu vehicle stopped in karnataka border due to sunday lockdown . so many vehicles crowded in attibele border
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X