பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி அரசில் வரி தீவிரவாதம்.. சித்தார்த்தா மரணத்தால் கொதிக்கும் சோஷியல் மீடியா

Google Oneindia Tamil News

Recommended Video

    CCD Siddhartha loss | கஷ்டப்பட்ட சித்தார்த்தா.. தொடர் இழப்பு.. அதிர்ச்சி தரும் பின்னணி!- வீடியோ

    பெங்களூர்: வருமான வரித்துறையினரின் நெருக்கடியால் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கஃபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

    சமீப காலமாக தனி நபர்கள் மீதான வரி விதிப்பு நமது நாட்டில் கூடிவிட்டது. இதனால் வாங்கும் சம்பளத்தில் பெரும் பகுதியை மக்கள் வரியாக செலவிட்டு வருகிறார்கள். இது தவிர பணக்காரர்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் நடைமுறையை, கடந்த சில பட்ஜெட்களாக பார்க்க முடிகிறது.

    இதனால், தொழில் தொடங்க நினைப்போர் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இந்த நிலையில், #TaxTerrorism என்ற பெயரில், தற்போதைய மத்திய அரசின் வரிவிதிப்பு முறையை, தீவிரவாதத்தோடு ஒப்பிட்டு டிரெண்ட் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.

    ஈஸி இல்லை

    எளிதாக தொழில் செய்யலாம் என்று மோடி கூறுவது பெரிய பொய்யாகும். தனக்கு வேண்டியவர்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த பிற நல்ல தொழிலதிபர்கள் பழி வாங்கப்படுகிறார்கள். அரசு ஏஜென்சிகள், இதற்கு முன்பு இப்படி தவறாக பயன்படுத்தப்பட்டதே இல்லை என்கிறார் இந்த நெட்டிசன்.

    கொலையாளிகள் சும்மா அலைகிறார்கள்

    தொலைநோக்கு பார்வை கொண்ட சித்தார்த்தா, 50,000 பேருக்கும் மேல் வேலை வாய்ப்பு கொடுத்தார். இன்று வரி தீவிரவாதத்தால் அவரை இழந்துள்ளோம். கொலையாளிகள், பலாத்கார குற்றவாளிகள், மோசடியாளர்கள் இதே நாட்டில் எளிதாக உலவ முடிகிறது. நல்லவர்களுக்கு இந்த நாடு இல்லை. இப்படி சொல்கிறார் இந்த நெட்டிசன்.

    ஐடி ரெய்டுகள்

    வருமான வரி சோதனையின்போது தொழிலதிபர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுவதாக கூறப்படும் செய்தி துணுக்கை வெளியிட்டு இந்த நெட்டிசன், இதுதான் வருவாய் ஈட்டித் தருவோருக்கு நேரும் கதி என்கிறார்.

    பிறருக்கு மட்டுமே

    #TaxTerrorism என்று சொல்வது தவறு. அரசு தனது நண்பர்களைத் தவிர்த்துவிட்டு பிறரை பழி வாங்க பயன்படுத்தும் ஆயுதமாக உள்ளது என்கிறார் இவர்.

    English summary
    That's how you treat tax payer and revenue generators! You are seriously harming the economy by Tax Terrorism, says Netizens.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X