• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ம்ஹூம்.. கல்யாணமே எனக்கு வேணாம்.. முதல்ல இதெல்லாம் தேவை.. தன் ஊருக்காக அதிரடி முடிவு எடுத்த டீச்சர்

Google Oneindia Tamil News

பெங்களூரு: தன்னுடைய ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக, இளம்பெண் ஒருவர் திருமணமே செய்து கொள்ள போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா தாலுகாவில் உள்ளது எச்.ராமபுரா என்ற கிராமம்... இது ஒரு மலைகிராமம்..

சுற்றிலும் காடுகள் உள்ளன.. இந்த வனப்பகுதியை நம்பி ஏராளமான குடும்பங்கள் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றன.

இடி மின்னலுடன் 5 நாட்களுக்கு மழை வெளுக்கும் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம் இடி மின்னலுடன் 5 நாட்களுக்கு மழை வெளுக்கும் - நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்

 மண் ரோடு

மண் ரோடு

ஆனால், இங்கு முறையான சாலை வசதிகளோ, அடிப்படை வசதிகளோ பல வருடங்களாகவே இல்லை... சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இவர்கள் நடந்து வெளியே வரவேண்டி உள்ளது.. இதனால் எப்போது மழை பெய்தாலும், மண் ரோடு சேறும் சகதியுமாக மாறிவிடும் நிலைமை உள்ளது... வழியெல்லாம் குண்டும் - குழியுமாக காட்சி தந்து கொண்டிருக்கிறது.

 செல்போன் வசதி

செல்போன் வசதி

அதேபோல, நெட் வசதி செல்போன் சேவையும் அங்கு இல்லை... பஸ் வசதியும் இல்லை.. இதுவரை பஸ்களும் அந்த கிராமத்திற்கு இயக்கப்படவுமில்லை.. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.. மேலும், ஒரு அவசரம் என்றாலும்சரி , மருத்துவ உதவி என்றாலும் சரி, அங்குள்ள கிராம மக்களால் நகர்ப்புறத்துக்கு வர முடிவதில்லை..

 கிராமம்

கிராமம்

இப்படி அனைத்து சிரமங்களையும் நேரடியாகவே அனுபவித்து வருபவர்தான் அதே கிராமத்தை சேர்ந்த பிந்து என்ற இளம்பெண்.. இவர் ஒரு ஆசிரியை.. தன்னுடைய கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் வேண்டும் என்று பலவாறாக முயன்று வருகிறார்.. தங்கள் பிரச்சனைகளை எல்லாம் சொல்லி, பிரதமருக்கும், அம்மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதினார்.. அதற்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் பதில் கடிதம் எழுதினாராம்.

அதிருப்தி

அதிருப்தி

மேலும், விரைவில் அந்த கிராமத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தாராம். ஆனால், இதுவரை எச்.ராமபுரா கிராமத்தில் எந்த பிரச்சனைக்கும் தீர்வு எட்டப்படவே இல்லை.. தன் மொத்த முயற்சியும் வீணாகிவிட்ட நிலையில், பிந்து கடுமையான அதிருப்திக்கு ஆளாகிவிட்டார்.. இதனால், ஒருவித அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளார்..

 அதிரடி அறிவிப்பு

அதிரடி அறிவிப்பு

அதன்படி, தன்னுடைய ஊருக்கு முறையான சாலை வசதி, இணையதள வசதி, செல்போன் சேவை, பஸ் சேவை கிடைக்கும் வரை, தான் கல்யாணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று கூறியுள்ளார்.. என்றைக்கு தன்னுடைய கிராமம் வளர்ச்சி அடைகிறதோ, அதற்கு பிறகுதான் திருமணம் செய்ய போவதாகவும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் டீச்சர் பிந்து.

English summary
H.Rampura is a village located in the Mayakonda taluka of Karnataka. It is a hill station with forests all around. Teacher Bindu has issued a notice of action as no basic facilities have been provided here. She has decided to get married only after the need of the village is met.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X