India
  • search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நீ கற்புக்கரசியா? எங்க நிரூபி பாப்போம்! மனைவியின் கையில் சூடமேற்றிய கணவன்! கைகள் கருகியதால் சோகம்..!

Google Oneindia Tamil News

பெங்களூரு : மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட கணவன் மனைவியின் கைகளை கற்பூரம் ஏற்றி சோதித்த போது, மனைவியின் கைகள் கருகிய நிகழ்வு கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் 48 சதவீதம் அதிகரித்துள்ளதாக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக குடும்ப வன்முறை முதல் பலாத்காரம், கொலை வரை, நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களுக்கு பஞ்சமில்லை.

சில நாட்களுக்கு முன்பு கூட காலை உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கணவர் மகாராஷ்டிராவில் நடந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“திருமணம் தாண்டிய உறவு” கணவன் கண்முன்னே போர்வைக்குள்ளேயேவா? மனைவிக்கு நேர்ந்த கதி.. சிலிர்த்த சென்னை“திருமணம் தாண்டிய உறவு” கணவன் கண்முன்னே போர்வைக்குள்ளேயேவா? மனைவிக்கு நேர்ந்த கதி.. சிலிர்த்த சென்னை

பெண்களுக்கெதிரான வன்முறை

பெண்களுக்கெதிரான வன்முறை

சமீப காலமாக அற்ப காரணங்களுக்காக இல்லத்தரசிகள் கொல்லப்படுவது அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாயின. பெரும்பாலான வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தான். சில சமயங்களில் மாமியார்கள் மீதும் கொலைக் குற்றம் சாட்டப்படுகிறது. பெண்கள் நலனுக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கருத்துப்படி, ஆண்களுக்கு சேவை செய்வது தான் பெண்களின் பணி என்பதுதான் இன்றைய சமூகக் கருத்தாக உள்ளது.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில் ராமாயணத்தில் சீதையின் கற்பை நிரூபிக்க அவரை ராமர் தீயில் இறங்கி வரச் சொன்னதாக புராணம் உள்ளது. இந்நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. அங்கு இளம் பெண் தனது கற்பை நிரூபிக்க தன் கைகளை நெருப்பில் எரிக்க வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் கணவர் தான் அவரை இந்த காரியத்தை செய்ய வேண்டுமென வற்புறுத்தியுள்ளார்.

நடத்தையில் சந்தேகம்

நடத்தையில் சந்தேகம்

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல் அருகேயுள்ள வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஆனந்த்துக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடத்தையில் ஆனந்த்திற்கு சந்தேகம் இருந்துள்ளது. இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆனந்த் தனது மனைவியிடம் உனது நடத்தையின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை போக்க கையில் கற்பூரம் ஏற்றி நீ கற்புக்கரசி என நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கைகள் எரிப்பு

கைகள் எரிப்பு

இதையடுத்து ஆனந்தின் மனைவியும் தனது உள்ளங்களையில் கற்பூரத்தை ஏற்றி உள்ளார். அப்போது தீ அவரது கை முழுவதும் பரவி எரிந்தது. இதனால் அவரது கை கருகிவிட்டது. ஆனாலும் ஆனந்த் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. அந்த பெண் தனது கணவர் ஆனந்த் குறித்தும் பயத்தில் புகார் அளிக்கவில்லை. ஆனால், அம்பேத்கரா சேவா சமிதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர் கே.எம்.சந்தேஷ் தலையிட்டதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தலைமறைவான கணவர் ஆனந்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
The incident where the wife's hands were charred has caused great shock in the state of Karnataka when the husband suspected that the wife was having an affair with someone else and tested her hands with camphor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X