பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்குகிறேன்... நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவிப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: அடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

பாஜக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் திடீரென சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார்.

The new political party begins in the next 3 months Actor Prakash Raj announces

வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக வேட்பாளர் பி.சி.மோகன் 6,02,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-வது இடத்தை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரிஸ்வான் ஹர்சத் பெற்றார். இதற்கு அடுத்தப்படியாக நடிகர் பிரகாஷ் ராஜ் 3-வது இடம் பிடித்து தோல்வி அடைந்தார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 28,906.

தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த பிரகாஷ் ராஜ், எனது கன்னத்தில் பலமான அறை விழுந்துள்ளது. மதசார்பற்ற இந்தியாவை உருவாக்க தொடர்ந்து சண்டையிடுவேன். இதற்கான கடினமான பயணம் தற்போது தொடங்கி உள்ளது என்றார்.

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி! தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் மட்டும்... ஐசிஎப் அதிரடி!

இந்தநிலையில், பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சி தொடங்கிய சிறிது காலத்திலேயே தேர்தலை சந்தித்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ள கமல்ஹாசன் மிகப்பெரிய வரவேற்பை பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அடுத்த 3 மாதத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.

English summary
Actor Prakash Raj announces That New political party begins in the next 3 months
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X