பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பாவும், மகனும் செய்த துரோகம்.. 11 வருடம் கழித்து பழிவாங்கிய எடியூரப்பா.. ஆட்சியை வீழ்த்த காரணம்!

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கடுமையாக போராடியதற்கு பின் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Assembly : பெரும் போராட்டம்.. நான்காவது முறையாக முதல்வராகும் எடியூரப்பா- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா கடுமையாக போராடியதற்கு பின் மூன்று முக்கிய காரணங்கள் உள்ளது.

    கர்நாடகாவில் அரசு கவிழ்ந்துள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா இன்று முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இன்று அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவர் என்று கூறப்படுகிறது.

    14 மாதங்களாக நீடித்த காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நேற்று முடிவிற்கு வந்தது. குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத அரசு கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்து உள்ளது.

    தேர்தல் முடிவுகள்

    தேர்தல் முடிவுகள்

    சென்ற வருடம் வந்த கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள்தான் இப்போது அந்த மாநிலத்தில் நடக்கும் எல்லா பிரச்சனைக்கும் காரணம் ஆகும். மூன்று முக்கிய கட்சிகளும் பெரும்பான்மை பெறாமல், தொங்கு சட்டசபை உருவானது. 225 எம்எல்ஏக்கள் இருக்கும் அவையில் பாஜக 105 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் 80 எம்எல்ஏக்கள், மதசார்பற்ற ஜனதா தளம் 37 எம்எல்ஏக்களை வென்றது.

    கண்ணீர் விட்டார்

    கண்ணீர் விட்டார்

    இதில் அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில் பாஜகவின் எடியூரப்பா ஆட்சியை பிடித்து, பின் பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் மஜத - காங்கிரஸ் இருவரும் கூட்டு சேர்ந்து உச்ச நீதிமன்றம் சென்றார்கள். இதனால் சரியாக இரண்டு நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எடியூரப்பா அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இல்லவே இல்லை

    இல்லவே இல்லை

    ஆனால் எடியூரப்பாவால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடியாது என்று எல்லோருக்கும் தெரிந்தது. இதனால் வாக்கெடுப்பை சந்திக்காமலே கண்ணீர்விட்டபடி பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. ஆனால் அப்போதே பாஜக இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்த ஆட்சியை கவிழ்க்கும் என்று சபதம் போட்டது. எடியூரப்பா அதை கச்சிதமாக முடித்துள்ளார்.

    அடுத்து என்ன

    அடுத்து என்ன

    2006ல் கர்நாடகாவில் மஜத மற்றும் பாஜக இரண்டு கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைத்தது. இரண்டரை வருடங்களுக்கு பின் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கையின் அடிப்படையில் குமாரசாமி அப்போது முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் 2008 மத்தியில், எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க வேண்டிய சூழ்நிலை வந்த நேரத்தில் குமாரசாமி அதற்கு எதிராக அரசியல் செய்தார்.

    சொன்னார்

    சொன்னார்

    இதை கடந்த வருடம் எடியூரப்பா சட்டசபையில் கூட கண்ணீர்விட்டபடி சொல்லிக்காட்டினார். 2008ல் அப்போதே குமாரசாமி என்னை ஏமாற்றினார். என்னை அவர் முதுகில் குத்தினார். அப்பாவும், மகனும் சேர்ந்து சொன்ன வாக்கை காக்காமல் ஏமாற்றினார்கள் என்று வெளிப்படையாக பேசி அதிர வைத்தார். அந்த ஏமாற்றங்களுக்கு எல்லாம் தற்போது 11 வருடம் கழித்து எடியூரப்பா பதிலடி கொடுத்துள்ளார்.

    பாஜக

    பாஜக

    எடியூரப்பா என்னதான் கர்நாடகாவில் பாஜகவின் முகமாக இருந்தாலும், அவரை எப்படியாவது கழற்றி விட வேண்டும் என்றுதான் பாஜக தேசிய தலைமை நினைத்து இருக்கிறது. 2013ல் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன் கூட எடியூரப்பா பாஜகவில் இருந்து விலகி தனியாக தேர்தலை சந்தித்தார். இதனால் பிரிந்த வாக்குகள்தான் அப்போது காங்கிரஸ் கட்சியின் சித்தராமையாவை முதல்வராக்கியது.

    மெசேஜ்

    மெசேஜ்

    2018 தேர்தலுக்கு பின்பு கூட எடியூரப்பாவை ஓரம் கட்டி வேறு தலைவர்களை கர்நாடகாவில் முன்னிறுத்ததான் பாஜக முயன்றது. ஆனால் குமாரசாமி ஆட்சியை கவிழ்த்து, தற்போது பாஜகவிற்கு ஒரே கர்நாடக முகம் நான்தான் என்பதை உறுதியாக நிரூபித்துள்ளார் எடியூரப்பா. இதன் மூலம் டெல்லி தேசிய பாஜக தலைமைக்கும் அழுத்தமான மெசேஜை அவர் அனுப்பியுள்ளார்!

    English summary
    The Story of Revenge: Reason Why BJP's Yeddy worked hard to topple the Karnataka government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X