பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராஜினமாவுக்கு முன்பு.. பின்பு.. குமாரசாமியின் தலைஎழுத்தை தீர்மானிக்கும் எம்எல்ஏக்கள் பலம் இதுதான்

Google Oneindia Tamil News

Recommended Video

    Karnataka Floor Test : இரவு முழுவதும் பேரவையில் தூங்கிய பாஜக உறுப்பினர்கள்

    பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு, எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் உள்ள பலத்தை இப்போது பார்த்துவிடுவோம்.

    கர்நாடகா சட்டசபையில் இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நேற்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாததை கண்டித்து பாஜகவினர் சட்டசபையிலேயே இரவு முழுவதும் தங்கினர். விடிய விடிய சட்டசபையில் தங்கி இருந்த பாஜக எம்எல்ஏக்கள் இன்று காலை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கிறார்கள்.

    The vote of confidence today,Strength in the Karnataka Assembly before and after mlas resign

    கர்நாடகா சட்டசபையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளிக்கும முன்பு ஆளும் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 37 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 79 இடங்களும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 105 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடமும், சுயேட்சைகள் 2 இடங்களும், இருந்தன.

    கெடு விதித்த ஆளுநருக்கு செக் வைக்கும் குமாரசாமி? உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டம் கெடு விதித்த ஆளுநருக்கு செக் வைக்கும் குமாரசாமி? உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டம்

    இப்போது காங்கிரஸ் மற்றும் மதசார்பாற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தவிட்டனர். ஆனால் அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. எனினும் அவர்கள் நேற்று சட்டசபைக்கு வரவில்லை, இதனால் தற்போதைய நிலையில் பாஜகவின் பலம் 105 ஆகவும், காங்கிரஸ் பலம் 67 ஆகவும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் பலம் 34 ஆகவும், பகுஜன் சமாஜ் கட்சியின் பலம் ஒன்று ஆகவும், சுயேட்சைகள் பலம் இரண்டாகவும் உள்ளது.

    இதனால் கர்நாடக சட்டசபையில் ஆளும் மதசார்பாற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் பகுஜன் சமாஜ் ஆதரவுடன் 102 ஆக உள்ளது . அதே சமயம் பாஜகவின் பலம் சுயேட்சைகளின் ஆதரவுடன் 107 ஆக உள்ளது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோற்பது உறுதியாகி உள்ளது. எனவே தான் முதல்வர் குமாரசாமி, உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநர் உத்தரவிட்டதற்கு எதிராக இன்று நாடியுள்ளார். இதனால் என்ன மாதிரியான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    today trust vote, parties Strength in the Karnataka Assembly before and after mlas resign
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X