பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

36 மணி நேரம் மின் வெட்டு.. அலறும் ஐடி தலைநகர் பெங்களூர்

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளின் பல ஏரியாக்களில் இன்றும் நாளையும், 36 மணி நேரம் வரை மின்வெட்டுக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப தலைநகர் என அழைக்கப்படுவது பெங்களூர். ஐடி துறையினர் இங்கு குவிந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வீக் என்ட் அவர்களுக்கு அவ்வளவு குஷியாக இருக்குமா என்பது கேள்விக்குறி. ஏனெனில் தெற்கு மற்றும் மேற்கு பெங்களூர் பகுதிகளின், பல பகுதிகளில் இன்றும் நாளையும், மின்சாரம் கட் செய்யப்படுகிறது.

There will be a 36 hours power cut in Bangalore

சனிக்கிழமை காலை 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிவரை மின் வெட்டு இருக்குமாம். மின்வெட்டால் பாதிக்கப்படப்போகும் பகுதிகள், விஜயநகர், ஆர்பிசிலேஅவுட், கோவிந்தராஜ் நகர், மாரேனஹள்ளி, நாகர்பாவி, காமாட்சிப்பாளையா, சந்திரா லேஅவுட், ஹம்பிநகர், சர் எம்வி லேஅவுட், கொடிகேஹள்ளி, பெல் லேஅவுட், பாபுஜிநகர், தீபாஞ்சலிநகர், ஹொசப்பாளையா, ஞானபாரதி, விநாயகா லேஅவுட், கெங்கேரி சேட்டிலைட் டவுன் ரயில்வே நிலையம், கிரிநகர், பேங்க் காலனி, ஸ்ரீநகர், ஹனுமந்தநகர், சாம்ராஜ்பேட், வித்யாபீடம், தியாகராஜாநகர், ஹொசகெரேஹள்ளி மற்றும் மைசூர் ரோடு, ஆகியவையாகும்.

எங்ககிட்ட மட்டும் தான் கடமைய கரக்டா செய்வீங்களா.? மின்வாரியத்தை வறுத்தெடுக்கும் மக்கள் எங்ககிட்ட மட்டும் தான் கடமைய கரக்டா செய்வீங்களா.? மின்வாரியத்தை வறுத்தெடுக்கும் மக்கள்

அமர்ஜோதி லேஅவுட், டொம்லூர், முருகேஷ்பாளையா, மல்லேஷ்பாளையா, இந்திராநகரின் சில பகுதிகள், மாருதிநகர், மாரத்தஹள்ளி, காவேரி லேஅவுட், சலாபுரியா டெக்பார்க் மற்றும் அருகேயுள்ள பகுதிகளில் இன்று பகல் 2 மணிக்கு மேல் மின் வினியோகம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

English summary
There will be a 36 hours power cut in Bangalore on Saturday and Sunday, announced by the officials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X